Tamil News  /  Astrology  /  Today Rasi Palan: Check Your Astrological Prediction Today
12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்
12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்

Today Rasi Palan: பணவரவுடன், மன நிம்மதியும் கூடும் நாள்

23 September 2022, 9:49 ISTMuthu Vinayagam Kosalairaman
  • Share on Twitter
  • Share on FaceBook
23 September 2022, 9:49 IST

12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலனை தெரிந்து கொள்ளுங்கள். இன்று சந்திர பகவான் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

மேஷம்

ட்ரெண்டிங் செய்திகள்

பல வழிகளில் பணம் வருவதற்கான பாதைகளைத் தேர்ந்தெடுப்பீர்கள். புதிய நட்புகளால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படலாம். பணியாளர்களுக்கு தற்போது உள்ள நிலையே தொடரும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஆதாயம் கிடைக்கும்

ரிஷபம்

தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்புகளை எளிதாக சமாளிப்பீர்கள். புதிய வீட்டுக்கு குடி போவதும் நடக்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை ஆர்வத்தோடு செய்து முடிப்பீர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதால் இல்லத்தில் சந்தோஷம் நிலவும்.

மிதுனம்

ஏற்றமான இருந்த வியாபாரத்தில் சின்ன இடையூறு ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய நல்ல செய்தி கிடைக்கும். சகோதர வகையில் செலவுகள் அதிகரிக்கும். மன நிம்மதி கூடும்

கடகம்

பிரிந்து போன குடும்பங்கள் ஒன்று சேரும். உங்கள் அறிவாற்றல் அதிகரித்து மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசு ஊழியர்கள் அற்புதமான பலனைப் பெறுவார்கள். வியாபாரத்துக்காக இடத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்படலாம்

சிம்மம்

புரணி பேசுபவர்களால் மன நிம்மதி கெடும். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த நன்மை கிடைப்பது கடினம். அரசு ஊழியர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டும். ஒப்பந்தக்காரர்களுக்கு வரவேண்டிய பணம் தள்ளிப்போகும். நியாயத்துக்குப் புறம்பாக நடந்தால் சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம்

கன்னி

கணவன் மனைவி உறவில் நீடித்த சங்கடங்கள் நீங்கும். பங்குச் சந்தையில் அதிக பணம் போட வேண்டாம். போட்டி பந்தயங்களில் இருந்து விலகியிருங்கள். பொது இடங்களில் தேவையற்ற விவாதங்கள் செய்ய வேண்டாம். உடல் நலத்தில் அக்கறை கொள்ளுங்கள்.

துலாம்

மற்றவர்களுக்காக நீங்கள் செய்கின்ற வேலை தடங்கல் இல்லாமல் முடியும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பண வரவு அதிகமாக இருப்பதால் கடனை அடைத்து நிம்மதி பெறுவீர்கள். பைனான்ஸ், அடகுக்கடை, ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்.

விருச்சிகம்

கடினமான நெருக்கடிகளைக் கடந்து செல்வீர்கள். இதுவரை உடல்நிலையில் இருந்த பாதிப்பு அகலும். வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைப்பதால் அதை விரிவுபடுத்த எண்ணம் கொள்வீர்கள். தனியார்துறை ஊழியர்களும் வருமானத்தைப் பெருக்கி சேமிப்பை அதிகரிப்பார்கள்.

தனுசு

புத்திசாலித்தனத்தால் வருமானத்தைப் பெருக்குவீர்கள். பணத்தின் மீது இருந்த மதிப்பை இப்போது உணர்ந்து கொள்வீர்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள். இடுப்பு வலி மூட்டு வலி ஆகியவற்றால் பாதிப்பு உண்டாகலாம். தந்தைவழி உறவுகளால் சண்டை சச்சரவு உருவாகலாம்.

மகரம்

கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் இருமடங்கு எச்சரிக்கை தேவை. கணவன் மனைவி இருவரும் அனுசரித்து நடந்தால் அமைதி உண்டாகும். யாருக்காகவும் ஜாமின் கையெழுத்துப் போடாதீர்கள். பயணங்களில் அதிக எச்சரிக்கையாக இருங்கள். சந்திராஷ்டம நாள். நிதானம் தேவை.

கும்பம்

தந்தையின் உடல்நிலையில் பாதிப்பு வந்து அகலும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்வீர்கள். அரசுப் பணியாளர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பயணங்களில் கவனமும் நிதானமும் தேவை.

மீனம்

வியாபாரத்தில் இருந்த சின்னச் சின்ன சிக்கல்கள் அகலும். சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைவார்கள். புதிய ஒப்பந்தங்கள் போடுவீர்கள். அரசுத் துறையில் நல்ல ஒத்துழைப்புக் கிடைக்கும். கேட்ட இடத்தில் பண உதவி வந்து சேரும்.

  • Share on Twitter
  • Share on FaceBook

டாபிக்ஸ்