Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜன.29 உங்களுக்கு சாதகமா?.. பாதகமா?
Today Rasipalan 29.01.2025: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 29 ஆம் தேதியான இன்று (புதன்கிழமை) துலாம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

Today Rasipalan 29.01.2025: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, ஜனவரி 29 ஆம் தேதியான இன்று (புதன்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
இது போன்ற போட்டோக்கள்
Feb 14, 2025 01:45 PMKumbha Rasi: கோடிகள் கொட்டும் சூரிய பெயர்ச்சி.. 2025-ல் கும்பத்தில் நுழைவு.. பணமழை யாருக்கு கிடைக்கும்?
Feb 14, 2025 01:03 PMSun Transit : சனியின் வீட்டில் சூரியன்.. 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் வரப்போகிறது!
Feb 14, 2025 12:28 PMLove : சில ராசிக்காரர்கள் எளிதாக காதலில் விழுவார்களாம்.. அதுவும் இந்த நான்கு ராசிகள் எளிதில் காதல் வயப்படுவார்களாம்!
Feb 14, 2025 11:11 AMMoney Luck: கொட்டிக் கொடுக்க வரும் குரு.. 2025-ல் ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்.. பணமழை கொட்டுவது உறுதியா?
Feb 14, 2025 10:18 AMLucky Zodiac : நான்கு கிரகங்களின் அற்புதமான சேர்க்கை.. இந்த 5 ராசிக்காரர்களுக்கு யோகம்.. வாழ்க்கையில் மாற்றம் நிகழும்!
Feb 14, 2025 10:03 AMValentine Day Remedy : காதல் வாழ்க்கையை மேம்படுத்த காதலர் தினத்தில் இதை செய்யுங்கள்.. உறவு வலுவாக இருக்குமாம்!
அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களே உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனைகள் மூலம் வியாபாரத்தில் மாற்றங்கள் உண்டாகும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உருவாகும். பயணங்களில் இருந்துவந்த காலதாமதம் குறையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் உண்டாகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். செய்யும் முயற்சிக்கு உண்டான வெற்றிகள் கிடைக்கும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே மறைமுக தடைகளை வெற்றிகொள்வீர்கள். எதிர்பார்த்து இருந்துவந்த வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் ஆதரவுகள் மேம்படும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
மகரம்
மகரம் ராசி அன்பர்களே உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான அலைச்சல் உண்டாகும். தற்பெருமை எண்ணங்களை குறைத்து செயல்படுவது நன்மை அளிக்கும். கணவன், மனைவி இடையே அனுசரித்துச் செல்லவும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
கும்பம்
கும்பம் ராசி அன்பர்களே வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். அரசு தொடர்பான காரியங்களில் சில விரயங்கள் உண்டாகும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். கடன் பிரச்சனைகள் குறையும்.
மீனம்
மீனம் ராசி அன்பர்களே வியாபார பணிகளில் சிறு மாற்றங்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத சில திடீர் பயணங்கள் கைகூடும். சமூகப் பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இல்லாத மன நிலை ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்