Today Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இன்று ஜன.27 உங்கள் நாள் எப்படி இருக்கும்?
Today Rasipalan 27.01.2025: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 27 ஆம் தேதியான இன்று (திங்கட்கிழமை) துலாம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

Today Rasipalan 27.01.2025: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது.
ஜோதிட கணக்குப்படி, ஜனவரி 27 ஆம் தேதியான இன்று (திங்கட்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களே வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் ஏற்படும். சக ஊழியர்களால் நினைத்தது நிறைவேறும். முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். பூர்வீக பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். செயல்களில் இருந்துவந்த தடுமாற்றம் மறையும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசி அன்பர்களே வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே மனதளவில் இருந்துவந்த இறுக்கங்கள் குறையும். பாகப் பிரிவினை செயல்களில் விவேகம் வேண்டும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வகையில் சுபச் செய்திகள் ஏற்படும். சமூக பணிகளில் அனுபவங்கள் அதிகரிக்கும். செய்யும் பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் காணப்படும்.
மகரம்
மகரம் ராசி அன்பர்களே பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் பொறுப்புகள் குறையும். திடீர் பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். பழைய விஷயங்களால் குழப்பம் உண்டாகும். மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும்.
கும்பம்
கும்பம் ராசி அன்பர்களே உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதுவிதமான தேடல்கள் மனதில் உருவாகும். தடைப்பட்ட பணிகளை விடாப்பிடியாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.
மீனம்
மீனம் ராசி அன்பர்களே வியாபார பணிகளில் முன்னேற்றமான சிந்தனைகள் உண்டாகும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். துறை சார்ந்த தெளிவுகள் ஏற்படும். மல்யுத்த போட்டிகளில் ஒரு விதமான ஆர்வம் ஏற்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். சமூக பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் ஏற்படும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்