Today Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜன.25 யாருக்கு ஏற்ற, இறக்கமான நாள்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜன.25 யாருக்கு ஏற்ற, இறக்கமான நாள்?

Today Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜன.25 யாருக்கு ஏற்ற, இறக்கமான நாள்?

Karthikeyan S HT Tamil
Jan 25, 2025 05:45 AM IST

Today Rasipalan 25.01.2025: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 25 ஆம் தேதியான இன்று (சனிக்கிழமை) துலாம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

Today Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜன.25 யாருக்கு ஏற்ற, இறக்கமான நாள்?
Today Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜன.25 யாருக்கு ஏற்ற, இறக்கமான நாள்?

இது போன்ற போட்டோக்கள்

துலாம்

துலாம் ராசி அன்பர்களே வெற்றி நிறைந்த நாள். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உருவாகும். சுபகாரிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். முன் கோபம் இன்றி செயல்படுவது நல்லது. நிர்வாகம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே மனதிற்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் தாமதம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான விஷயங்களில் விவேகம் வேண்டும். பணிகளின் தன்மைகளை அறிந்து முடிவுகளை எடுக்கவும். சுபகாரியங்களில் அனுசரித்து செல்லவும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். புதிய விஷயங்களை கண்டுபிடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் ஏற்படும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பழைய உறவினர் ஒருவரிடமிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

மகரம்

மகரம் ராசி அன்பர்களே யோசிக்காமல் முடிவெடுத்தால் பிரச்சனை அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இணையம் சார்ந்த துறைகளில் உள்ள கவனம் வேண்டும். கலைத் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன்கள் தீர ஆலோசனைகள் கிடைக்கும்.

கும்பம்

கும்பம் ராசி அன்பர்களே வாகன பயணங்களால் ஆதாயம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகப் பணிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தேவையற்ற கோபத்தைத் தவிர்க்கவும்.

மீனம்

மீனம் ராசி அன்பர்களே உழைப்பிற்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்