Today Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜன.12 உங்கள் நாள் எப்படி இருக்கும்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜன.12 உங்கள் நாள் எப்படி இருக்கும்!

Today Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜன.12 உங்கள் நாள் எப்படி இருக்கும்!

Karthikeyan S HT Tamil
Published Jan 12, 2025 06:35 AM IST

Today Rasipalan 12.01.2025: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 12 ஆம் தேதியான இன்று (ஞாயிற்றுக்கிழமை) துலாம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

Today Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜன.12 உங்கள் நாள் எப்படி இருக்கும்!
Today Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜன.12 உங்கள் நாள் எப்படி இருக்கும்!

இது போன்ற போட்டோக்கள்

அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாமன் வழி உறவுகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளிநாட்டு தொடர்புகள் மூலம் அலைச்சல் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உருவாகும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசி அன்பர்களே குழந்தைகள் தொடர்பான செயல்களில் கவனத்துடன் இருக்கவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதளவில் குழப்பம் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். பொழுதுபோக்கு செயல்களால் கையிருப்புகள் குறையும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே நண்பர்களின் சந்திப்பு புதிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். ஆரோக்கியம் தொடர்பான சில இன்னல்கள் குறையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். .

மகரம்

மகரம் ராசி அன்பர்களே விவாதங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை பொறுமையுடன் கேட்டு முடிவெடுப்பது நல்லது. ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆர்வமும் அதனால் விரயமும் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும்.

கும்பம்

கும்பம் ராசி அன்பர்களே மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனை அதிகரிக்கும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம்

மீனம் ராசி அன்பர்களே குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிறு மற்றும் குறுந்தொழிலில் ஆதாயம் மேம்படும். வெளியூர் பயணங்கள் மூலம் மதிப்பு அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வீடு மற்றும் மனை சார்ந்த முதலீடுகளில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.