Today Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று பிப்.05 உங்களுக்கு சாதகமா?.. பாதகமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று பிப்.05 உங்களுக்கு சாதகமா?.. பாதகமா?

Today Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று பிப்.05 உங்களுக்கு சாதகமா?.. பாதகமா?

Karthikeyan S HT Tamil
Feb 05, 2025 05:05 AM IST

Today Rasipalan: ஜோதிட கணக்கீடுகளின்படி, பிப்ரவரி 05 ஆம் தேதியான இன்று துலாம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று பிப்.05 உங்களுக்கு சாதகமா?.. பாதகமா?
துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று பிப்.05 உங்களுக்கு சாதகமா?.. பாதகமா?

அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபங்கள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். கலைத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். தம்பதிகளுக்குள் நெருக்கம் மேம்படும். வர்த்தகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே திடீர் தன வரவுகள் உண்டாகும். நண்பர்களுடன் அனுசரித்துச் செல்லவும். சுபகாரியங்களை முன் நின்று செய்வீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். பணிபுரியும் இடத்தில் மதிப்புகள் உண்டாகும். நினைத்ததை செய்து முடிப்பதற்கான சூழல் அமையும்.

தனுசு

தனுசு ராசியினரே மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எழுத்து தொடர்பான துறைகளில் கற்பனை வளம் அதிகரிக்கும். இணைய பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உருவாகும்.

மகரம்

மகரம் ராசி அன்பர்களே உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். மனை தொடர்பான பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வும் அதற்கான உதவியும் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வாக்குவாதங்கள் குறையும்.

கும்பம்

கும்பம் ராசி அன்பர்களே வெளிவட்டத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். கடன்களை அடைப்பதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உறவுகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். திட்டமிட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும்.

மீனம்

மீனம் ராசி அன்பர்களே நண்பர்களிடத்தில் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவுகள் ஏற்படும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் வரவுகள் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் மதிப்புகள் மேம்படும். மனதளவில் புதிய நம்பிக்கை உருவாகும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner