Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று பிப்.02 உங்கள் நாள் எப்படி இருக்கும்?
Today Rasipalan 02.02.2025: ஜோதிட கணக்கீடுகளின்படி, பிப்ரவரி 02ஆம் தேதியான இன்று (ஞாயிறு) துலாம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

Today Rasipalan 02.02.2025: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, பிப்ரவரி 02 ஆம் தேதியான இன்று (ஞாயிறு) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களே கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும். பழைய சிக்கல்கள் குறையும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் திறமைகள் வெளிப்படும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசி அன்பர்களே எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். எதிலும் சிக்கனமாக செயல்படத் துவங்குவீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். வியாபார பணிகளில் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே தொழில் நுட்பக் கருவிகளில் கவனம் வேண்டும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் கைகூடும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். ஆடம்பரமான சிந்தனைகளை தவிர்த்து சிக்கனமாக செயல்படுவீர்கள். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
மகரம்
மகரம் ராசி அன்பர்களே சுபகாரிய முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் மேம்படும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும்.
கும்பம்
கும்பம் ராசி அன்பர்களே உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். வங்கி தொடர்பான பணிகள் நிறைவு பெறும். ஆபரண விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.
மீனம்
மீனம் ராசி அன்பர்களே இன்றைய நாளில் பலதரப்பட்ட சிந்தனைகளால் இறுக்கமான சூழல்கள் உண்டாகும். புதியவர்களிடத்தில் கவனத்துடன் இருக்கவும். உதவும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். பழைய கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். செய்யும் முயற்சிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்பும் பணியும் அதிகரிக்கும். எதிலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்