Today Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜன.25 பண ஆதாயம் எந்த ராசிக்கு பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜன.25 பண ஆதாயம் எந்த ராசிக்கு பாருங்க!

Today Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜன.25 பண ஆதாயம் எந்த ராசிக்கு பாருங்க!

Karthikeyan S HT Tamil
Jan 25, 2025 05:40 AM IST

Today Rasipalan (25.01.2025): ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 25 ஆம் தேதியான இன்று (சனிக்கிழமை) மேஷம் முதல் கன்னி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

Today Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜன.25 பண ஆதாயம் எந்த ராசிக்கு பாருங்க!
Today Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜன.25 பண ஆதாயம் எந்த ராசிக்கு பாருங்க!

அந்தவகையில், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில்நுட்பக் கருவிகளால் விரயங்கள் உண்டாகும். விளையாட்டு விஷயங்களில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல்கள் உண்டாகும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

ரிஷபம்

ரிஷப ராசியினரே வேலையில் சில தடைகளை சந்திக்க நேரிடும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் மேம்படும். வெளியூர் பயணங்களால் சாதகமான சூழல் அமையும். பணி நிமித்தமான சில முக்கியக்ஷ முடிவுகளை எடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்

மிதுனம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு பொருளாதார சிக்கல்கள் குறையும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை ஆட்களின் ஒத்துழைப்புகள் மூலம் லாபம் அடைவீர்கள். சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். சக ஊழியர்கள் சிலருடன் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம்.

கடகம்

கடக ராசி அன்பர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும்.

சிம்மம்

சிம்மம் ராசி அன்பர்களே சக ஊழியர்களால் பொறுப்புகள் குறையும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். சிறு தூரப் பயணங்களால் மனதில் மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். வியாபார பணிகளில் சுமாரான வரவுகள் ஏற்படும். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பழைய நண்பரை சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்