இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று மே 16 உங்கள் நாள் எப்படி இருக்கும்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று மே 16 உங்கள் நாள் எப்படி இருக்கும்?

இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று மே 16 உங்கள் நாள் எப்படி இருக்கும்?

Karthikeyan S HT Tamil
Published May 16, 2025 05:35 AM IST

இன்றைய ராசிபலன்: ஜோதிட கணக்கீடுகளின்படி, மே 16 ஆம் தேதியான இன்று மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று மே 16 உங்கள் நாள் எப்படி இருக்கும்?
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று மே 16 உங்கள் நாள் எப்படி இருக்கும்?

இது போன்ற போட்டோக்கள்

மேஷம்

மேஷ ராசியினரே பிடிவாதப் போக்கினை குறைத்துக் கொள்ளவும். ஜாமீன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில வரவுகளால் சேமிப்புகள் மேம்படும்.

ரிஷபம்

ரிஷப ராசியினரே உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் பேச்சுக்களை பொறுமையாக கையாளவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் உண்டாகும். எதிலும் அலட்சியமின்றி செயல்படவும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே மனதளவில் புதிய சிந்தனைகள் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த முதலீடுகளை மேற்கொள்வீர்கள். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு பெருகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட காலப் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே உறவினர்களுடன் சிறு சிறு விவாதங்கள் வந்து போகும். முயற்சிகளுக்கு ஏற்ப புதிய வேலைகள் சாதகமாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் பொறுமை வேண்டும். பங்குதாரர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அரசு வழியில் ஆதாயம் ஏற்படும். நெருக்கமானவர்களின் மூலம் ஒத்துழைப்பு ஏற்படும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். தெய்வீகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். சிந்தனைகளில் சில குழப்பங்கள் உண்டாகும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். நெருக்கடியாக இருந்துவந்த சில பிரச்னைகள் குறையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.