Today Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜன.12 கவனமாக இருக்க வேண்டியது யார்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜன.12 கவனமாக இருக்க வேண்டியது யார்?

Today Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜன.12 கவனமாக இருக்க வேண்டியது யார்?

Karthikeyan S HT Tamil
Jan 12, 2025 06:11 AM IST

Today Rasipalan 12.01.2025: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 12 ஆம் தேதியான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேஷம் முதல் கன்னி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

Today Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜன.12 கவனமாக இருக்க வேண்டியது யார்?
Today Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜன.12 கவனமாக இருக்க வேண்டியது யார்?

அந்தவகையில், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷம் ராசி அன்பர்களே தன்னம்பிக்கையுடன் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். அதிகார பதவிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். விளையாட்டு விஷயத்தில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். கவனம் வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே வியாபார பணிகளில் நெருக்கடிகள் குறையும். உங்கள் கருத்துக்களுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். மனதில் நேர்மறை சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் மாற்றங்கள் உருவாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே எதிர்பாராத சில பயணங்கள் மூலம் தூக்கமின்மையும், சோர்வும் ஏற்படும். அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்கள் பேச்சுக்களில் கவனம் வேண்டும். சகோதர உறவுகளிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். 

கடகம்

கடக ராசி அன்பர்களே குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் இருந்தாலும் ஒத்துழைப்பு ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். 

சிம்மம்

சிம்மம் ராசி அன்பர்களே மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்கள் வருகையால் அலைச்சலும் விரயங்களும் உண்டாகும். 

கன்னி

கன்னி ராசி அன்பர்களே குடும்பத்தில் அமைதி உண்டாகும். பாதியில் நின்ற பணிகளைச் செய்து முடிப்பீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். எதிர்பாராத சில அனுபவங்கள் மூலம் புதிய பாதை புலப்படும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் ஆதாயம் ஏற்படும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner