Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜன.11 உங்களுக்கு எப்படி இருக்கும் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜன.11 உங்களுக்கு எப்படி இருக்கும் பாருங்க!

Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜன.11 உங்களுக்கு எப்படி இருக்கும் பாருங்க!

Karthikeyan S HT Tamil
Jan 11, 2025 05:45 AM IST

Today Rasipalan 11.01.2025: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 11 ஆம் தேதியான இன்று (சனிக்கிழமை) மேஷம் முதல் கன்னி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜன.11 உங்களுக்கு எப்படி இருக்கும் பாருங்க!
Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜன.11 உங்களுக்கு எப்படி இருக்கும் பாருங்க!

அந்தவகையில், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷம் ராசி அன்பர்களே இன்றைய நாளில் வெளியூர் வர்த்தகப் பணிகளில் கவனம் வேண்டும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பணம் விஷயத்தில் நெருக்கடிகள் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வீடு மற்றும் மனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அலுவலகப் பணிகளில் திடீர் மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் வெளியூர் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். வாகனம் சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே மனதில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். மற்றவர்களின் குறைகளை மாறுபட்ட முறையில் சுட்டிக் காட்டுவது நல்லது. சக ஊழியர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். ஆடம்பரமான செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.  பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் ஏற்படும்.

கடகம்

கடகம் ராசி அன்பர்களே மனதில் எண்ணிய நீண்ட நாள் ஆசைகளில் சில நிறைவேறும். பெற்றோர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சுபகாரிய எண்ணங்கள் பலிதமாகும். வியாபாரத்தைப் பெருக்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். 

சிம்மம்

சிம்மம் ராசி அன்பர்களே உத்தியோகத்தில் பணியிட மாற்றம் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். வியாபார பணிகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். வீடு மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். தொழில் சார்ந்த புதிய முயற்சிகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவருடன் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே உறவினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். தந்தையுடன் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner