Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று பிப்.04 உங்களுக்கு எப்படி இருக்கும்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று பிப்.04 உங்களுக்கு எப்படி இருக்கும்?

Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று பிப்.04 உங்களுக்கு எப்படி இருக்கும்?

Karthikeyan S HT Tamil
Feb 04, 2025 05:16 AM IST

Today Rasipalan 04.02.2025: ஜோதிட கணக்கீடுகளின்படி, பிப்ரவரி 04 ஆம் தேதியான இன்று மேஷம் முதல் கன்னி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று பிப்.04 உங்களுக்கு எப்படி இருக்கும்?
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று பிப்.04 உங்களுக்கு எப்படி இருக்கும்?

அந்தவகையில், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே வியாபாரப் பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். கடன் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்க்கவும். கால்நடை செயல்களில் சற்று கவனம் வேண்டும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சிந்தனைப் போக்கில் மாற்றமான சூழல் ஏற்படும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே கணவன், மனைவிக்கிடையே வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரத்தில் நயமான பேச்சுக்கள் நன்மையை தரும். சில நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பனிப்போர்கள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்கவும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். செல்வச் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.  உடன் பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.

கடகம்

கடக ராசி அன்பர்களே தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். விளையாட்டுப் போட்டிகளில் விவேகம் வேண்டும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். தகவல் தொடர்பு துறைகளில் புதுவிதமான சூழல் ஏற்படும். வியாபார இடமாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். பயணம் சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்மம்

சிம்மம் ராசி அன்பர்களே கணவன், மனைவிக்கு இடையே இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த உதவிகள் சாதகமாகும். புதியவர்களின் நட்பின் மூலம் உற்சாகம் ஏற்படும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கணிசமான உயர்வு ஏற்படும். மனதளவில் தெளிவும், புத்துணர்ச்சியும் ஏற்படும். பணி சார்ந்த பழைய பிரச்சனைகள் குறையும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே வியாபார பணிகளில் பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்துகொள்ளவும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். அரசு பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். பயண செயல்களில் சில மாற்றம் ஏற்படும். மனதிலிருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் சிந்தித்துச் செயல்படவும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner