இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜூன் 03 உங்கள் நாள் எப்படி இருக்கும்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜூன் 03 உங்கள் நாள் எப்படி இருக்கும்?

இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜூன் 03 உங்கள் நாள் எப்படி இருக்கும்?

Karthikeyan S HT Tamil
Published Jun 03, 2025 05:54 AM IST

இன்றைய ராசிபலன்: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜூன் 03 ஆம் தேதியான இன்று மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜூன் 03 உங்கள் நாள் எப்படி இருக்கும்?
இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜூன் 03 உங்கள் நாள் எப்படி இருக்கும்?

இது போன்ற போட்டோக்கள்

அந்தவகையில், மேஷம் முதல் கன்னி வரை உள்ள 06 ராசிக்காரர்களுக்கு இன்று என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

மேஷம்

மேஷ ராசியினரே எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உறவினர்களின் வருகைகள் உண்டாகும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியினரே கூட்டாளிகள் வழியில் ஆதரவு ஏற்படும். நண்பர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். கல்விப் பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

மிதுனம்

மிதுன ராசியினரே அக்கம், பக்கம் இருப்பவரிடம் அனுசரித்து செல்லவும். உறவுகள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் அமைதி உண்டாகும். தொழிலில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உத்தியோகப் பணிகளில் ஆதரவு கிடைக்கும். மனதளவில் புதிய சிந்தனைகள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்

கடக ராசியினரே உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிறுதூரப் பயணங்களால் மாற்றங்கள் உண்டாகும். தகவல் தொடர்பு துறையில் ஆதாயம் மேம்படும்.

சிம்மம்

சிம்ம ராசியினரே உறவுகளைப் பற்றிய எண்ணங்கள் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். உற்பத்தி துறைகளில் பொறுமை வேண்டும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். பயணங்களில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

கன்னி

கன்னி ராசியினரே கடன் பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். சகோதரர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். ஆராய்ச்சி பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்பு ஏற்படும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.