Today Rasipalan 26.01.2025: மேஷம் முதல் மீனம் ராசி வரை இன்று ஜன.26 நாள் எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்
Today Rasipalan 26.01.2025: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 26 ஆம் தேதியான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

Today Rasipalan 26.01.2025: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, ஜனவரி 26 ஆம் தேதியான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அந்தவகையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Feb 17, 2025 05:00 AMToday Rasipalan : 'மகிழ்ச்சியா இருங்க.. உழைப்பு வீண் போகாது.. நம்பிக்கை முக்கியம்' இன்று பிப்ரவரி 17 ராசிபலன் இதோ!
Feb 16, 2025 10:33 PMTrigrahi Yogam : சிவராத்திரிக்குப் பின் எந்த 3 ராசிக்காரர்களுக்கு கடினமான காலமாக இருக்கலாம் பாருங்க.. வேலையில் கவனம்!
Feb 16, 2025 01:26 PMMercury in Pisces : மீன ராசியில் புதன்.. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் என்ன பலன்.. இதோ பாருங்க!
Feb 16, 2025 07:00 AMRahu Horoscope: ராகு 2025-ல் கும்பத்தில் நுழைகிறார்.. 3 ராசிகள் வாழ்க்கை என்ன ஆகப்போகுது தெரியுமா.. வாங்க பார்க்கலாம்
Feb 16, 2025 05:00 AMToday Rasipalan : ‘வெற்றி தேடி வரும்.. கோபம் வேண்டாம்.. வேலையில் கவனம் மக்களே’ இன்று பிப்.16 ராசிபலன் இதோ!
Feb 15, 2025 11:24 AMLove Horoscope : இன்று எந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்? யார் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?
மேஷம்
எதிலும் அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். எதிர்காலம் பற்றி புதிய பாதைகள் புலப்படும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.
ரிஷபம்
பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வாக்குறுதி அளிக்கும் பொழுது சிந்தித்துச் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் பொறுமை வேண்டும். குடும்ப விவகாரங்களை பகிர்வதை தவிர்க்கவும்.
மிதுனம்
தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும்.
கடகம்
எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாலின மக்கள் விஷயத்தில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். கொடுக்கல், வாங்கலில் லாபங்கள் மேம்படும். நிலுவையில் இருந்து வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள்.
சிம்மம்
மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அலுவல் பணிகள் சற்று குறையும். பூர்வீக சொத்து சார்ந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும்.
கன்னி
குடும்பத்தின் வசதிகளை மேம்படுத்துவீர்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். புதிய எண்ணங்கள் அதிகரிக்கும். மனை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் ஏற்படும்.
துலாம்
மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். புதிய தொழில்நுட்பக் கருவிகள் வாங்குவீர்கள். மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய ஒப்பந்தம் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.
விருச்சிகம்
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.
தனுசு
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதியவர்களிடத்தில் கவனத்துடன் செயல்படவும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இல்லாத மன நிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும்.
மகரம்
வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். புலனாய்வு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். புதிய இடத்தில் தங்குவதற்கான சூழ்நிலைகள் அமையும்.
கும்பம்
வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.
மீனம்
நண்பர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விலகி இருந்தவர்கள் திரும்பி வருவார்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்