இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜூன் 24ம் தேதி உங்களுக்கு சாதகமா? பாதகமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜூன் 24ம் தேதி உங்களுக்கு சாதகமா? பாதகமா?

இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜூன் 24ம் தேதி உங்களுக்கு சாதகமா? பாதகமா?

Karthikeyan S HT Tamil
Published Jun 24, 2025 06:38 AM IST

ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜூன் 24 ஆம் தேதியான இன்று (செவ்வாய்க்கிழமை) மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜூன் 24ம் தேதி உங்களுக்கு சாதகமா? பாதகமா?
இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜூன் 24ம் தேதி உங்களுக்கு சாதகமா? பாதகமா?

இது போன்ற போட்டோக்கள்

அந்தவகையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொள்வீர்கள். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே பழைய விஷயங்களால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். ஜாமீன் விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சற்று கவனத்தோடு செயல்பட வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளால் ஒருவிதமான குழப்பங்கள் ஏற்படும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். தடைப்பட்ட பேச்சுக்கள் கைகூடும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். எதிலும் நிதானத்துடன் செயல்படவும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே மற்றவர்களின் எண்ணங்களைப் புரிந்து செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே வியாபாரப் பணிகளில் வித்தியாசமான முயற்சிகளின் மூலம் முன்னேற்றத்தை உண்டாக்குவீர்கள். கல்வி பணிகளில் மேன்மை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். நிர்வாகத் திறமை மேம்படும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் மேம்படும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே உறவுகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். விவசாயப் பணிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே மனதளவில் ஒருவிதமான குழப்பம் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். மற்றவர்கள் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல்கள் ஏற்படும். பணி நிமித்தமான விஷயங்களைப் பகிராமல் இருக்கவும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். சகோதரர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வாகன பழுதுகளைச் சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். வழக்கு விஷயங்களில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உறவுகளின் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசு விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே தற்பெருமையான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். வித்தியாசமான எண்ணங்களும், முயற்சிகளும் அதிகரிக்கும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் அமையும். வியாபார பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும். அலுவலகத்தில் பொறுமை காப்பது நல்லது.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நவீன மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பதற்கான பக்குவம் உண்டாகும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே திட்டமிட்ட பணிகளில் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். மாறுபட்ட அணுகுமுறைகளால் தடைகளை வெற்றிகொள்வீர்கள். சவாலான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.