Today Rasipalan 23.01.2025: மேஷம் முதல் மீனம் ராசி வரை இன்று நாள் எப்படி இருக்கும்?.. 12 ராசிகளுக்கான விரிவான பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan 23.01.2025: மேஷம் முதல் மீனம் ராசி வரை இன்று நாள் எப்படி இருக்கும்?.. 12 ராசிகளுக்கான விரிவான பலன்கள்!

Today Rasipalan 23.01.2025: மேஷம் முதல் மீனம் ராசி வரை இன்று நாள் எப்படி இருக்கும்?.. 12 ராசிகளுக்கான விரிவான பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Jan 23, 2025 05:45 AM IST

Today Rasipalan 23.01.2025: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 23 ஆம் தேதியான இன்று (வியாழக்கிழமை) மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

Today Rasipalan 23.01.2025: மேஷம் முதல் மீனம் ராசி வரை இன்று நாள் எப்படி இருக்கும்?.. 12 ராசிகளுக்கான விரிவான பலன்கள்!
Today Rasipalan 23.01.2025: மேஷம் முதல் மீனம் ராசி வரை இன்று நாள் எப்படி இருக்கும்?.. 12 ராசிகளுக்கான விரிவான பலன்கள்!

மேஷம்

மேஷம் ராசியினரே நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். 

ரிஷபம்

ரிஷபம் ராசியினரே கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். சேமிப்பு சிந்தனைகள் மேம்படும். கால்நடைகள் மூலம் லாபகரமான சூழல் உண்டாகும்.

மிதுனம்

சிம்மம் ராசியினரே பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும்.

கடகம்

கடக ராசியினரே நினைத்த சில காரியங்களில் அலைச்சல் ஏற்படும். தாயாருடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் லாபம் அதிகரிக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசியினரே தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். தொழில் முயற்சிகளில் விவேகம் வேண்டும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி

கன்னி ராசியினரே குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வதால் நன்மைகள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும்.

துலாம்

துலாம் ராசியினரே நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வாகனங்களில் நிதானம் வேண்டும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.

விருச்சிகம்

வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

தனுசு

உத்தியோகம் நிமித்தமான பணிகளில் பொறுப்புகள் குறையும். சொத்துக்கள் மூலம் மேன்மை ஏற்படும். உயர்கல்வியில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். 

மகரம்

மகரம் ராசியினரே வெளியூர் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவங்கள் உருவாகும். உறவினர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். உயர் மட்ட அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். 

கும்பம்

கும்ப ராசியினரே பலம் மற்றும் பலவீனங்களை உணருவீர்கள். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். தள்ளிப்போன சுப காரியம் கைகூடி வரும். உறவினர்கள் வழியில் மதிப்புகள் ஏற்படும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.

மீனம்

மீனம் ராசியினரே சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல்கள் உண்டாகும். மனதில் இருந்த குழப்பங்கள் குறையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whats_app_banner