Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜன.21 யாருக்கு சூப்பரான நாள்?.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜன.21 யாருக்கு சூப்பரான நாள்?.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜன.21 யாருக்கு சூப்பரான நாள்?.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Jan 21, 2025 06:41 AM IST

Today Rasipalan 21.01.2025: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 21 ஆம் தேதியான இன்று (செவ்வாய்க்கிழமை) மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜன.21 யாருக்கு சூப்பரான நாள்?.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!
Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜன.21 யாருக்கு சூப்பரான நாள்?.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

அந்தவகையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். ஒப்பந்தப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் வருகைகள் உண்டாகும். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்

மனை சார்ந்த பணிகளால் ஆதாயம் அடைவீர்கள். மற்றவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பிடித்ததை வாங்கி மகிழ்வீர்கள். மனதை  உறுத்திக் கொண்டிருந்த சில கவலைகள் விலகும்.

மிதுனம்

புதுவிதமான இலக்குகள் மனதில் பிறக்கும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றம் பிறக்கும். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும்.

கடகம்

மனதளவில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். தடைப்பட்ட பணிகள் நிறைவு பெறும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். திட்டமிட்ட சில காரியங்கள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும்.

சிம்மம்

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.  எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். சேமிப்பு தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

துலாம்

எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பணிகளின் தன்மைகளை அறிந்து முடிவெடுக்கவும். வாக்குறுதிகள் அளிக்கும் பொழுது சிந்தித்துச் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும்.

விருச்சிகம்

வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் ஏற்படும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கல்வி பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். விவசாய பணிகளில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். 

தனுசு

அலுவலகத்தில் பொறுப்பறிந்து செயல்படுவீர்கள். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உறவுகள் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். பணியாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும்.

மகரம்

கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை உண்டாகும். எதிர்பார்த்திருந்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வருகைகள் ஏற்படும். வியாபார பணிகளில் போட்டிகள் குறையும். தடைப்பட்ட சில  வேலைகள் முடியும். அலுவலகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும்.

கும்பம்

எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். அரசு பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். அக்கம், பக்கம் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். 

மீனம்

தனவரவு ஓரளவு இருக்கும். உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். நிதானமான பேச்சுகள் நன்மதிப்பை உருவாக்கும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் பொறுமை வேண்டும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whats_app_banner