Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜன.20 உங்கள் நாள் எப்படி இருக்கும்?.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Rasipalan 20.01.2025: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 20 ஆம் தேதியான இன்று (திங்கட்கிழமை) மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, ஜனவரி 20 ஆம் தேதியான இன்று (திங்கட்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அந்தவகையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மனதளவில் இருந்துவந்த சஞ்சலங்கள் குறையும். அரசால் அனுகூலம் ஏற்படும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். எடுத்துச் செல்லும் உடமைகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். பழக்க வழக்கத்தில் சில மாற்றம் ஏற்படும்.
ரிஷபம்
கற்பனை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும்.
மிதுனம்
நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். செல்வச்சேர்க்கை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
கடகம்
எதிர்பாராத சில விஷயங்கள் மூலம் மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். உத்தியோக பணிகளில் உழைப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் நிமித்தமான முயற்சிகள் அதிகரிக்கும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
சிம்மம்
கணவன், மனைவி இடையே இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். தவறி போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விளையாட்டான பேச்சுகளை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களால் மாற்றம் ஏற்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். வியாபார பணிகளில் வரவுகள் அதிகரிக்கும்.
கன்னி
எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்கவும். சமூகப் பணிகளில் கௌரவ பொறுப்புகள் கிடைக்கும். நினைவாற்றலில் இருந்துவந்த மந்த தன்மைகள் விலகும். மற்றவரிடம் எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் கிடைக்கும்.
துலாம்
கணவன் மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். வேள்விப் பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும்.
விருச்சிகம்
சாமர்த்தியமான பேச்சுக்கள் மூலம் இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் அபிவிருத்தி தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவும், அமைதியும் உண்டாகும்.
தனுசு
வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்துவீர்கள். அரசுப் பணிகளில் ஆதாயம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் சிறு அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள்.
மகரம்
மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். பாகப்பிரிவினை முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும் அன்யோன்யமும் மேம்படும். உத்யோக ரீதியான செயல்பாடுகளில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள்.
கும்பம்
இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். இனம் புரியாத சில சிந்தனைகளால் தயக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. வேலை பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும்.
மீனம்
சுபகாரிய செயல்கள் சாதகமாக முடியும். குழந்தைகளால் மதிப்புகள் மேம்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். போட்டிப்பந்தயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கங்கள் மேம்படும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்