Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜன.19 உங்களுக்கு எப்படி இருக்கும்?.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜன.19 உங்களுக்கு எப்படி இருக்கும்?.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜன.19 உங்களுக்கு எப்படி இருக்கும்?.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Jan 19, 2025 06:19 AM IST

Today Rasipalan 19.01.2025: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 19 ஆம் தேதியான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜன.19 உங்களுக்கு எப்படி இருக்கும்?.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜன.19 உங்களுக்கு எப்படி இருக்கும்?.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

அந்தவகையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

அலுவலகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தாய் மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறைகளால் புதுமைகளை ஏற்படுத்துவீர்கள். எதிர்பாராத திடீர் தன வரவுகள் சிலருக்கு ஏற்படும்.

ரிஷபம்

உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் புதுவிதமான சூழல்கள் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய சுயரூபம் வெளிப்படும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

மிதுனம்

முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளின் வழியில் வரன் அமையும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

கடகம்

வியாபாரத்தில் புதிய அணுகுமுறைகளை கையாளுவீர்கள். சிந்தனைப் போக்கில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். மாமனார் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். இடமாற்றம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும்.

சிம்மம்

எதிர்பாராத உதவியால் பொருளாதார ரீதியாக இருந்துவந்த பிரச்சனைகள் சற்று குறையும். பெற்றோரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஒப்பந்தப் பணிகளில் இழுபறிகள் மறையும்.

கன்னி

வியாபாரத்தில் நெளிவு, சுழிவுகளை அறிந்து செயல்படவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். பணிபுரியும் இடத்தில் மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் தொடர்பான சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும்.

துலாம்

திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். எதிர்மறை சிந்தனைகளால் சோர்வுகள் உண்டாகும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். அசதிகள் மூலம் சோர்வும், காலதாமதமும் ஏற்படும். செய்யும் முயற்சியில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும்.

விருச்சிகம்

அலுவலகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அமையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் மேம்படும்.

தனுசு

பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த இழுபறியான சூழல் குறையும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரம் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். வெளி வட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும்.

மகரம்

உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தெய்வீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். தனித்திறமைகளை வளர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். நேர்மைக்குண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும்.

கும்பம்

பேச்சுக்களில் நிதானம் வேண்டும். செயல்பாடுகளில் திருப்தியற்ற மனநிலையினால் குழப்பங்கள் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்கள் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத செலவுகள் மூலம் விரயங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். திடீர் பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும்.

மீனம்

உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். வாகனம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பள்ளிப் பருவ நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். சுபகாரிய விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்