Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜன.18 உங்களுக்கு நெருக்கடி உண்டாகுமா?.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!
Today Rasipalan 18.01.2025: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 18 ஆம் தேதியான இன்று (சனிக்கிழமை) மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, ஜனவரி 18 ஆம் தேதியான இன்று (சனிக்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அந்தவகையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
வருமானத்தை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். திறமையை வெளிப்படுத்த சாதகமான வாய்ப்புகள் அமையும்.
ரிஷபம்
நண்பர்களின் ஆதரவுகள் கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். முன்யோசனை இன்றி செயல்படுவதை குறைத்து கொள்ளவும். தாய்வழி உறவுகளுடன் ஒத்துழைப்பு ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும்.
மிதுனம்
குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதையும் தாங்கும் மனவலிமை உண்டாகும். இடமாற்ற முயற்சி கைகூடும். பாகப்பிரிவினைகளில் இருந்துவந்த தாமதம் குறையும். இளைய சகோதரர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். பத்திரம் தொடர்பான விஷயங்களில் ஆதாயம் ஏற்படும்.
கடகம்
கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். பொருளாதார பிரச்சனைகள் குறையும். நண்பர்களிடத்தில் எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகும். ஆரோக்கியம் தொடர்பான சிக்கல்கள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் கிடைக்கும்.
சிம்மம்
வெளியூர் தொடர்பான வர்த்தகத்தில் சிந்தித்துச் செயல்படவும். வெளிப்படையான குணத்தின் மூலம் நட்பு வட்டம் அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தவறிய சில ஆவணங்களை அறிவீர்கள்.
கன்னி
தடைகள் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தாழ்வு மனப்பான்மையால் ஒரு விதமான குழப்பங்கள் ஏற்படும். புதுவிதமான பயணங்கள் மூலம் அனுபவங்கள் அதிகரிக்கும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும்.
துலாம்
அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும்.
விருச்சிகம்
உழைப்புக்குண்டான மதிப்புகள் கிடைக்கும். நண்பர்களிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பிரபலமானவர்களால் ஆதாயம் ஏற்படும். மருத்துவ பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் பெருகும்.
தனுசு
வெளி வட்டாரங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உருவாகும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உருவாகும்.
மகரம்
குடும்ப உறுப்பினர்களால் மன வருத்தங்கள் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணை வழியில் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் ஏற்படும்.
கும்பம்
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வீடு வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உறவுகள் வழியில் உதவிகள் கிடைக்கும்.
மீனம்
ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தூரத்து உறவினர்களின் வருகைகள் ஏற்படும். அரசு பணிகளில் ஆதாயம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். வழக்குகளில் நல்ல தீர்ப்புகள் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு:
இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றைத் தேர்வு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரை அணுகவும்.
