Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜன.16 ஜாக்பாட் யாருக்கு ?.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!
Today Rasipalan 16.01.2025: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 16 ஆம் தேதியான இன்று (வியாழக்கிழமை) மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, ஜனவரி 16 ஆம் தேதியான இன்று (வியாழக்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அந்தவகையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மறைமுகமாக கிடைக்கும். வழக்கு பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
ரிஷபம்
உறவினர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். கூட்டாளிகள் வழியில் அனுசரித்துச் சென்றால் லாபம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும்.
மிதுனம்
குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் இருக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும்.
கடகம்
வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதன் மூலம் நெருக்கடிகளை குறைக்க இயலும்.
சிம்மம்
வியாபார பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது அவசியமாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவும், புரிதலும் உண்டாகும்.
கன்னி
உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். சுற்றுலா துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும்.
துலாம்
கொடுக்கல், வாங்கலில் லாபம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் சார்ந்த பயணம் மூலம் மேன்மை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.
விருச்சிகம்
வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தநிலை படிப்படியாக குறையும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். அரசு செயல்களில் பொறுமையுடன் செயல்படவும்.
தனுசு
கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய முதலீடுகள் தொடர்பான எண்ணங்களில் தகுந்த ஆலோசனைகளை பெறவும். விவேகம் வேண்டிய நாள்.
மகரம்
வியாபார முன்னேற்றத்திற்கான அலைச்சல்கள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்கள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். வெளிவட்டாரத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும்.
கும்பம்
கணவன், மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.
மீனம்
உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சொத்துக்கள் சார்ந்த விஷயங்களுக்கு தீர்வுகள் ஏற்படும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
