Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜனவரி 15 யாருக்கு சூப்பரான நாள்?.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜனவரி 15 யாருக்கு சூப்பரான நாள்?.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜனவரி 15 யாருக்கு சூப்பரான நாள்?.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Jan 15, 2025 07:16 AM IST

Today Rasipalan 12.01.2025: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 15 ஆம் தேதியான இன்று (புதன்கிழமை) மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜனவரி 15 யாருக்கு சூப்பரான நாள்?.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!
Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜனவரி 15 யாருக்கு சூப்பரான நாள்?.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

அந்தவகையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் கிடைக்கும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். 

ரிஷபம்

உடன்பிறந்தவர்கள் வழியில் இருந்துவந்த சங்கடங்கள் மறையும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்பாலின மக்கள் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உருவாகும். 

மிதுனம்

குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். மகிழ்ச்சியான பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கால்நடைகள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். 

கடகம்

கடன் செயல்களில் கவனம் வேண்டும். தாய்வழி உறவினர்கள் இடத்தில் நிதானம் வேண்டும். சில மறைமுக தடைகள் மூலம் செயல்களில் தாமதம் உண்டாகும். உணவு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். பொருளாதார பிரச்சனைகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். 

சிம்மம்

பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்கள் இடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பிறமொழி பேசும் மக்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடிவு பெறும். 

கன்னி

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொன், பொருட்ச்சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். 

துலாம்

பணிபுரியும் இடத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். சமையல் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். இரவு நேர பணிகளில் சில மாற்றம் ஏற்படும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். அரசு சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும். 

விருச்சிகம்

வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். 

தனுசு

எதிர்பாராத சில செய்திகள் மூலம் விரயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தனவரவுகளில் தாமதம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் விழிப்புணர்வு வேண்டும். மற்றவர்கள் இடத்தில் அதிக உரிமைகள் கொள்ள வேண்டாம். வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். 

மகரம்

சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். 

கும்பம்

கும்பம் ராசியினரே உடனிருப்பவர்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த இழுபறி குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகளால் நெருக்கடிகள் குறையும். 

மீனம்

வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். விவேகமான சிந்தனைகள் மூலம் ஆதாயத்தை மேம்படுத்துவீர்கள். நண்பர்களுடன் கலந்துரையாடி மனம் மகிழ்வீர்கள். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner