Today Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜன.27 உங்கள் நாள் எப்படி இருக்கும்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜன.27 உங்கள் நாள் எப்படி இருக்கும்?

Today Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜன.27 உங்கள் நாள் எப்படி இருக்கும்?

Karthikeyan S HT Tamil
Jan 27, 2025 06:20 AM IST

Today Rasipalan 27.01.2025: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 27 ஆம் தேதியான இன்று (திங்கட்கிழமை) மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிக்காரர்களில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

Today Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜன.27 உங்கள் நாள் எப்படி இருக்கும்?
Today Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜன.27 உங்கள் நாள் எப்படி இருக்கும்?

இது போன்ற போட்டோக்கள்

மேஷம்

மேஷம் ராசி அன்பர்களே நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். திடீர் முடிவுகளால் சில மாற்றங்கள் ஏற்படும். அலுவலகத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷபம் ராசி அன்பர்களே உறவினர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். அரசுப் பணிகளில் சற்று கவனத்துடன் செயல்படவும். பணிபுரியும் இடத்தில் விவேகத்துடன் இருக்கவும். வியாபார அபிவிருத்தி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.

மிதுனம்

மிதுனம் ராசி அன்பர்களே சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மனதளவில் இருந்துவந்த தாழ்வு மனப்பான்மை குறையும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம்

கடகம் ராசி அன்பர்களே வெளி வட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். திடீர் தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். அனுபவங்கள் மூலம் சில முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள்.

சிம்மம்

சிம்மம் ராசி அன்பர்களே உடன் பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்பாராத சில உதவிகள் மூலம் நன்மைகள் உண்டாகும். வியாபார பணிகளில் லாபங்கள் மேம்படும். மனதளவில் பக்குவமும், புரிதலும் அதிகரிக்கும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே தாய் வழி உறவுகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். தொழில் வாழ்க்கையில் வெற்றியை அடைய தொடர்ந்து கடினமாக உழைக்கவும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்