Today Rashi Palan (30.09.2024) 'எல்லாம் நன்மைக்கே'..மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!-today rashi palan daily horoscope tamil astrological prediction for 30 september 2024 - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rashi Palan (30.09.2024) 'எல்லாம் நன்மைக்கே'..மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!

Today Rashi Palan (30.09.2024) 'எல்லாம் நன்மைக்கே'..மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Sep 30, 2024 06:59 AM IST

Today Rashi Palan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 30) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rashi Palan (30.09.2024) 'எல்லாம் நன்மைக்கே'..மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!
Today Rashi Palan (30.09.2024) 'எல்லாம் நன்மைக்கே'..மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!

Today Rashi Palan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

குழந்தைகளின் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு மேம்படும். தள்ளிப்போன சில வேலைகள் நிறைவேறும். புதிய பொருட்களின் சேர்க்கை ஏற்படும். மறைமுக திறமைகள் வெளிப்படும். மனதளவில் புதிய நம்பிக்கை உண்டாகும். 

ரிஷபம்

கடன் தொடர்பான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். கல்வியில் இருந்துவந்த தடுமாற்றம் மறையும். அரசு வழியில் சாதகமான செய்திகள் கிடைக்கும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். 

மிதுனம்

எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்துவதற்கான முயற்சி மேம்படும். வெளியூர் பயணங்களால் அனுபவம் கிடைக்கும். குழந்தைகளால் மதிப்பு அதிகரிக்கும். நவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும்.  

கடகம்

குடும்பப் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாக்குறுதி அளிப்பதை தவிர்ப்பது நல்லது. புதிய வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். 

கன்னி

பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்புகள் குறையும். உறவினர்களுக்கிடையே இருந்துவந்த சலசலப்புகள் குறையும். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு பிறக்கும். 

துலாம்

தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் ஏற்படும். எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். மாறுபட்ட அணுகுமுறைகளால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பழைய வாகனங்களை மாற்றுவீர்கள். அடிப்படை தேவைகளை மேம்படுத்துவீர்கள். 

விருச்சிகம்

தவறிய சில பொருட்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல ஒரு மாற்றத்தை தரும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உண்மையானவர்களை புரிந்து கொள்வீர்கள். உணவு பழக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும்.  

தனுசு

மனதளவில் தைரியம் பிறக்கும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். திட்டமிடாத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வியாபாரம் ரீதியான செயல்களில் அனுபவம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். 

கும்பம்

எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். புதிய கூட்டாளிகள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சகோதரர்களின் வழியில் ஒற்றுமை மேம்படும். நண்பர்களின் உதவியால் சாதகமான வாய்ப்புகள் அமையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நல்ல விதத்தில் நிறைவேறும்.  பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும். 

மீனம்

சவாலான செயல்களையும் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். விளையாட்டு சார்ந்த செயல்களில் ஆதாயம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் ஆதாயம் ஏற்படும். மின் சாதனப் பொருட்களில் கவனம் வேண்டும். எடுக்கும் முயற்சிகளில் புதிய அனுபவம் ஏற்படும். 

Whats_app_banner

டாபிக்ஸ்