(23.10.2024) இன்று உங்களுக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  (23.10.2024) இன்று உங்களுக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!

(23.10.2024) இன்று உங்களுக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Oct 23, 2024 06:36 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (அக்டோபர் 23) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(23.10.2024) இன்று உங்களுக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!
(23.10.2024) இன்று உங்களுக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!

மேஷம்

மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும்.

ரிஷபம்

திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரப் பணிகளில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் துரிதம் ஏற்படும். கல்வியில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள்.

மிதுனம்

குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான ரகசியங்களில் கவனம் வேண்டும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும்.

கடகம்

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை ஏற்படும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.

சிம்மம்

சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கலைத்துறையில் மேன்மை ஏற்படும். சிறு சிறு பிரச்சனைகளுக்கு முடிவுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படும்.

கன்னி

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். நண்பர்களின் ஆலோசனைகளால் மாற்றம் ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். லாபம் நிறைந்த நாள்.

துலாம்

தடைபட்ட பணிகள் நிறைவு பெறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். நெருக்கமானவர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும்.  வியாபாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும்.

விருச்சிகம்

முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். இனம்புரியாத கற்பனைகளால் சோர்வு உண்டாகும். குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். மாணவர்களுக்கு மறதி பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் விரயங்கள் ஏற்படும். வியாபாரம் நிமித்தமான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும்.

தனுசு

சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் உண்டாகும்.

மகரம்

எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கடன் பிரச்னைகள் குறையும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும்.

கும்பம் 

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தம் நீங்கும்.

மீனம்

எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். உடல் அளவில் இருந்துவந்த சோர்வு குறையும். குழந்தைகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரப் பணிகளில் சுமூகமான சூழல் அமையும். உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்