(22.10.2024) இன்று உங்களுக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (அக்டோபர் 22) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
புதிய செயல்திட்டங்களை செயல்படுத்த முயல்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தம்பதிகளுக்குள் நெருக்கம் மேம்படும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனை விருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். நேர்மை நிறைந்த நாள்.
ரிஷபம்
குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். வெளிவட்டார நட்பு சிறப்பாக இருக்கும். பொருளாதார சிக்கல்கள் சீராகும். நண்பர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். வசதி வாய்ப்புகள் மேம்படும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
மிதுனம்
புதிய தொழில்நுட்ப கருவிகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.
கடகம்
நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வெளி ஆட்களுடன் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்புகள் குறையும். ஆதாயம் நிறைந்த நாள்.
சிம்மம்
எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் நிமித்தமான உதவிகள் கிடைக்கும்.
கன்னி
உத்தியோகஸ்தர்களுக்கு சாதகமான சூழல் அமையும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கையின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களிடம் பேசி மகிழ்வீர்கள். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும்.
துலாம்
சக பணியாளர்களால் ஆதாயம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். இணையம் சார்ந்த தொழில்களில் முன்னேற்றம் உண்டாகும்.
விருச்சிகம்
நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வழக்கு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தில் வீண் செலவு அதிகரிக்கும்.
தனுசு
வெளியூர் தொழில் முயற்சிகளால் லாபம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். பணிகளில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க முயல்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் சற்று கவனம் வேண்டும்.
கும்பம்
வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். தன வரவுகள் தேவைக்கு இருக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் அமையும்.
மீனம்
பெற்றோரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். கால்நடை பணிகளில் மேன்மை உண்டாகும். சிந்தித்துச் செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலைகளில் எதிர்பார்த்த சூழல் அமையும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும்.
டாபிக்ஸ்