Today Rashi Palan (21.09.2024) எந்த ராசிக்கு இன்று மகிழ்ச்சியான நாள்?.. மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்!
Today Rashi Palan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 21) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today Rashi Palan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும். நினைவாற்றலில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகளில் பொறுமை வேண்டும். ஆடம்பர பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும்.
ரிஷபம்
மறதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகள் தாமதமாக நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். மற்றவர்களைப் பற்றிய கண்ணோட்டங்களில் மாற்றம் பிறக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும்.
மிதுனம்
எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். பயணங்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்
குடும்ப உறுப்பினர்களிடத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். விவேகத்துடன் செயல்படவும். சமூகப் பணிகளில் பொறுமையுடன் செயல்படுவது நலல்து. மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை அளிப்பதை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடம் பணிவுடன் செயல்படவும். உற்சாகம் நிறைந்த நாள்.
சிம்மம்
திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும்.
கன்னி
குழந்தைகளிடத்தில் பொறுமை வேண்டும். சந்தேக உணர்வுகளால் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். கனிவான பேச்சுக்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.
துலாம்
மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். குழந்தைகளின் வழியில் ஒற்றுமை ஏற்படும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம்
உடல் ஆரோக்கியம் மேம்படும். உயர்கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். கடன் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் படிப்படியாக குறையும். சேமிக்கும் பழக்கம் மேம்படும். உத்தியோகத்தில் கவனத்துடன் செயல்படவும்.
தனுசு
உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதளவில் புதிய சிந்தனைகள் உண்டாகும். கலைத்துறையில் மேன்மை ஏற்படும். சக ஊழியர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். எதிலும் தனித்து செயல்படுவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
மகரம்
வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். பணிகளில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தனம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். இடமாற்றங்கள் மூலம் அனுகூலமான சூழல் ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவதற்கான யோகம் அமையும். உழைப்பு மேம்படும் நாள்.
கும்பம்
மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை ஏற்படும். சகோதர வகையில் அனுசரித்துச் செல்லவும். வாகன பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள்.
மீனம்
உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். நண்பர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். போட்டி சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
டாபிக்ஸ்