(09.10.2024) இன்று எந்த ராதிக்காரருக்கு நிதானம் தேவை?.. மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (அக்டோபர் 09) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 09 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 30, 2025 05:33 PMபாக்கியங்களை அள்ளிக் கொட்ட வரும் குரு.. மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ராசிகள்.. பணக்கார யோகம் யாருக்கு?
Apr 30, 2025 01:58 PMகங்கா சப்தமி நாளில் உருவாகும் திரிபுஷ்கர, ரவி யோகம்.. வருமானம், நிதி நிலை மேம்பாடு பெறப்போகும் 5 ராசிகள் இதோ
Apr 30, 2025 10:15 AMகோடிகளில் நனைய போகும் ராசிகள்.. செல்வத்தால் நிரப்பப்போகும் குரு.. வந்துவிட்டது யோகம்!
Apr 30, 2025 07:30 AMகூரைய பிச்சுகிட்டு கொட்டும் பணமழை.. சூரியன் வேலை ஆரம்பம்.. 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?
Apr 30, 2025 05:00 AMஅட்சய திருதியையில் அதிர்ஷ்டம் யாருக்கு.. இன்று ஏப்.30, 2025 உங்களுக்கு சாதகமா.. பாதகமா.. ஜாக்பாட் யாருக்கு பாருங்க!
Apr 29, 2025 10:53 AMசனி இன்று நுழைகிறார்.. உத்திரட்டாதியில் பண யோகம் பொங்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
மேஷம்
மனைவி வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை ஏற்படும். புதுவிதமான சிந்தனைகள் மூலம் புத்துணர்ச்சியான தருணங்கள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மேன்மை உண்டாகும்.
ரிஷபம்
தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் பொறுப்பும், பணிகளும் அதிகரிக்கும். வியாபார பயணங்களில் வீண் அலைச்சல்களும், விரயமும் ஏற்படும். வித்தியாசமான கற்பனைகள் மூலம் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும்.
மிதுனம்
நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். பழகும் தன்மையில் சில மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் சாதகமான சூழ்நிலை உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும்.
கடகம்
வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் ஈடேறும். நெருக்கமானவர்கள் மூலம் அலைச்சலும், புரிதலும் உண்டாகும். தடைகள் விலகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும்.
சிம்மம்
தொழில் சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். குழந்தைகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும்.
கன்னி
உறவினர்களின் வழியில் புரிதல் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் மாற்றமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைப்போக்கில் கவனம் வேண்டும்.
துலாம்
திறமைக்கு உண்டான மதிப்பு அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் பற்றிய கவலைகளை தவிர்ப்பது நல்லது. செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். வியாபாரப் பணிகளில் அலைச்சல்கள் மேம்படும்.
விருச்சிகம்
நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும்.
தனுசு
மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மற்றவர்களின் பணிகளை சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். அதிகார பதவிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். சமூகப் பணிகளில் கோபமின்றி பொறுமையுடன் இருக்கவும். வர்த்தகப் பணிகளில் நிதானம் வேண்டும்.
மகரம்
உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் கனிவு வேண்டும். இறை வழிபாடுகள் புதிய தெளிவை ஏற்படுத்தும். ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். வாகன பயணங்களில் நிதானம் அவசியம். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும்.
கும்பம்
மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். வேலையாட்களின் ஆதரவு மேம்படும். சுபகாரியங்களை முன்நின்று செய்து முடிப்பீர்கள். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். உடலளவில் இருந்துவந்த சோர்வு நீங்கும்.
மீனம்
புதிய தொழில் தொடங்குவதற்கான சிந்தனைகள் மேம்படும். நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். மற்றவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வெளிப்படையான செயல்பாடுகள் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள்.

டாபிக்ஸ்