Today Rashi Palan 06.09.2024: இன்றைய ராசிபலன்கள்..மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்?..12 ராசிக்கான பலன்கள் இதோ!-today rashi palan daily horoscope tamil astrological prediction for 06 september 2024 - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rashi Palan 06.09.2024: இன்றைய ராசிபலன்கள்..மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்?..12 ராசிக்கான பலன்கள் இதோ!

Today Rashi Palan 06.09.2024: இன்றைய ராசிபலன்கள்..மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்?..12 ராசிக்கான பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Sep 06, 2024 05:03 AM IST

Today Rashi Palan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 06) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rashi Palan 06.09.2024: இன்றைய ராசிபலன்கள்..மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்?..12 ராசிக்கான பலன்கள் இதோ!
Today Rashi Palan 06.09.2024: இன்றைய ராசிபலன்கள்..மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்?..12 ராசிக்கான பலன்கள் இதோ!

மேஷம்

வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் ஏற்படும். சுப காரிய முயற்சிகள் ஈடேறும். தடைப்பட்ட சில வரவுகள் கிடைக்கும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். மறைமுகமாக இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும்.

ரிஷபம்

நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பணி நிமித்தமான பயணம் ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். கலை சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம்

விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கலை பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும்.

கடகம்

திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். அலைப்பேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மேம்படும். சிறு தூர பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும். மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும்.

சிம்மம்

பொருளாதார நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும்.  எதிர்காலம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். கூட்டு வியாபாரத்தில் அனுசரித்துச் செல்லவும்.

கன்னி

வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். செயல்களில் ஆர்வமின்மை ஏற்படும். உங்கள் மீதான சில விமர்சனங்கள் மறையும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள்.

துலாம்

செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். தடைப்பட்ட சில வரவுகள் கிடைக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் மூலம் மாற்றம் பிறக்கும். உபரி வருமானம் குறித்த சாதகமான சூழல் உண்டாகும். இறை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

வியாபார முயற்சிகளில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த புதிய இலக்குகள் பிறக்கும். காப்பீடு பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். தந்தைவழி தொழில் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும்.

தனுசு

வியாபாரத்தில் புதுவிதமான மாற்றங்கள் மூலம் லாபம் உண்டாகும். மருத்துவ துறைகளில் லாபம் பெருகும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். அந்நிய வர்த்தகத்தில் லாபம் மேம்படும். உயர் அதிகாரிகள் மூலம் ஆதரவான சூழ்நிலை ஏற்படும்.

மகரம்

பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். பாதியில் நின்ற வேலைகளை செய்து முடிப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பழக்கவழக்கங்களில் சிறு மாற்றம் ஏற்படும்.

கும்பம்

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பமான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செயல்படவும். 

மீனம்

சுப காரிய எண்ணம் சாதகமாக நிறைவேறும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வரவுகளில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். மனை விற்பனையில் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

டாபிக்ஸ்