Today Rashi Palan (04.09.2024): இன்றைய ராசிபலன்கள்..மேஷம் முதல் மீனம் வரை லாபம் யாருக்கு?..12 ராசிகளுக்கான பலன்கள்!
Today Rashi Palan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 04) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today Rashi Palan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 04 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். எதிர்பார்த்த சில உதவிகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். கல்வி தொடர்பான பணிகளில் சாதகமான சூழ்நிலை உண்டாகும்.
ரிஷபம்
உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு ஏற்படும். எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கற்றல் திறனில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.
மிதுனம்
குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை ஏற்படும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் வழியில் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலம் பிறக்கும். உயர்கல்வி தொடர்பான குழப்பம் விலகும். கடன் தொடர்பான நெருக்கடிகள் சற்று குறையும்.
கடகம்
பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். தன வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளால் அனுகூலம் ஏற்படும்.
சிம்மம்
உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தோற்றப் பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். பேச்சுத் திறமையால் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.
கன்னி
வர்த்தக வியாபாரம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் அனுபவம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். சாதுரியமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
துலாம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உணவு துறைகளில் திறமைகள் வெளிப்படும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் அதிகரிக்கும். அனுபவம் மேம்படும் நாள்.
விருச்சிகம்
புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வாக்குவன்மையின் மூலம் நன்மை உண்டாகும். சகோதரர்களின் வழியில் சில உதவிகள் சாதகமாக அமையும். லாபம் நிறைந்த நாள்.
தனுசு
உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். கல்வி பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். கலை சார்ந்த பணிகளில் அனுபவம் ஏற்படும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள்.
மகரம்
மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வர்த்தகப் பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம்
நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த பணிகளில் அலைச்சல் ஏற்படும்.
மீனம்
சுப காரிய பேச்சுக்கள் கைகூடுவதற்கான சூழ்நிலை ஏற்படும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். உடன்பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும்.
டாபிக்ஸ்