(04.11.2024) இந்த நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  (04.11.2024) இந்த நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!

(04.11.2024) இந்த நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Nov 04, 2024 07:09 AM IST

ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 04 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(04.11.2024) இந்த நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!
(04.11.2024) இந்த நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!

மேஷம்

வியாபாரம் நிமித்தமான செயல்களில் கவனம் வேண்டும். அரசு பணிகளில் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். சிந்தனைப் போக்கில் குழப்பம் உண்டாகும். மற்றவர்கள் மீதான கருத்துகளை தவிர்க்கவும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். 

ரிஷபம்

நண்பர்கள் வட்டாரம் விரிவடையும். அரசு தொடர்பான பணிகளால் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலை உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும்.  

கடகம்

குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். காப்பீடு சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். 

சிம்மம்

உறவினர்களின் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழ்நிலை ஏற்படும். தர்ம காரியங்களில் ஈடுபட்டு மனமகிழ்வீர்கள். கடன் நெருக்கடிகள் ஓரளவு குறையும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். 

கன்னி

அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். குறுந்தொழில் செயல்களில் சாதகமான சூழல் ஏற்படும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சீர் செய்வீர்கள். சொத்து பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும். வழக்கு பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.  

துலாம்

நிதானமான செயல்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். 

விருச்சிகம்

இனம்புரியாத சில சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வியாபார நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். மறைமுக தடைகளை அறிவீர்கள். மனை சார்ந்த செயல்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும்.  

தனுசு

உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வெளி வட்டாரங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். 

மகரம்

தன வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சில பணிகளில் அனுசரித்துச் செல்வதன் மூலம் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். 

கும்பம்

தனம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் அதிகரிக்கும். அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை தரும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். எண்ணங்களில் மாற்றங்கள் உண்டாகும். 

மீனம்

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆராய்ச்சி துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். இழுபறியான சில வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கமிஷன் பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். 

Whats_app_banner

டாபிக்ஸ்