(01.11.2024) மாதத்தின் முதல் நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  (01.11.2024) மாதத்தின் முதல் நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!

(01.11.2024) மாதத்தின் முதல் நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Nov 01, 2024 06:31 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (நவம்பர் 01) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(01.11.2024) மாதத்தின் முதல் நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!
(01.11.2024) மாதத்தின் முதல் நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!

மேஷம்

நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உண்டாக்கும். சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தன வருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

 ரிஷபம் 

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் நிறைவு பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில புதிய பயணங்களின் மூலம் அனுபவம் கிடைக்கும்

 மிதுனம்

குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். 

 கடகம் 

புதிய வீடு மற்றும் மனை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களிடத்தில் புரிதல் அதிகரிக்கும். புதிய முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். கால்நடைகளின் மூலம் அலைச்சல் உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். 

 சிம்மம் 

குழந்தைகளின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். அண்டை, அயலார் ஆதரவுடன் செயல்படுவார்கள். பத்திரிகை துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். முதுநிலை கல்வி தொடர்பான 

கன்னி 

உத்தியோக ரீதியான வெளி வட்டார நட்புகள் அதிகரிக்கும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். துரிதமான செயல்பாடுகளின் மூலம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பேச்சுக்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

துலாம்

உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் வேண்டும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக்கொள்ளவும். வேலையாட்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். மனதில் இனம்புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

விருச்சிகம் 

வியாபாரப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில இடமாற்றங்கள் ஏற்படும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வித்தியாசமான கற்பனைகள் மூலம் மனதில் குழப்பம் உண்டாகும். நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். சிந்தனை பிறக்கும் நாள்.

தனுசு 

பெரியவர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய தெளிவினை ஏற்படுத்தும். செய்கின்ற செயல்களில் கவனம் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். அயல்நாட்டு வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். கோபம் மறையும் நாள்.

 மகரம் 

சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். தன வருவாயில் இழுபறியான சூழ்நிலை ஏற்படும். உற்பத்தி சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். வாக்குகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். கல்வி கற்கும் திறனில் மாற்றங்கள் ஏற்படும். காது தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். 

 

 கும்பம் 

பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். சமூகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்க இயலும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். 

 மீனம் 

தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் உண்டாகும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபார ரீதியான முயற்சிகளில் விவேகம் வேண்டும்.

Whats_app_banner

டாபிக்ஸ்