மேஷம் முதல் மீனம் வரை.. இன்று யாருக்கு சூப்பரான நாள்?.. ஜனவரி 06ம் தேதி 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மேஷம் முதல் மீனம் வரை.. இன்று யாருக்கு சூப்பரான நாள்?.. ஜனவரி 06ம் தேதி 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

மேஷம் முதல் மீனம் வரை.. இன்று யாருக்கு சூப்பரான நாள்?.. ஜனவரி 06ம் தேதி 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Jan 06, 2025 06:55 AM IST

ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 06 ஆம் தேதியான இன்று (திங்கட்கிழமை) மேஷம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

மேஷம் முதல் மீனம் வரை.. யாருக்கு சூப்பரான நாள்?.. ஜனவரி 06ம் தேதி 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!
மேஷம் முதல் மீனம் வரை.. யாருக்கு சூப்பரான நாள்?.. ஜனவரி 06ம் தேதி 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

மேஷம்

வாழ்க்கைத் துணையுடன் அன்பாக நடந்து கொள்ளவும். வெளியூர் தொடர்பான பயணங்கள் ஈடேறும். விடாப்பிடியான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். 

ரிஷபம்

விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆசை பிறக்கும் நாள்.

மிதுனம்

செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். கல்வி சார்ந்த செயல்களில் மாற்றம் உண்டாகும். அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த உதவிகள் சாதகமாகும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். உற்சாகம் நிறைந்த நாள்.

கடகம்

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வாழ்க்கைத் துணையுடன் சிறுதூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். கடனை அடைப்பதற்கு வாய்ப்புகள் உருவாகும். புகழ் நிறைந்த நாள்.

சிம்மம்

எதிர்காலம் தொடர்பான விளம்பரங்கள் சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வரவுக்கேற்ப செலவுகள் உண்டாகும். செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். 

கன்னி

உத்தியோகத்தில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். புதுவிதமான இலக்குகள் மனதில் பிறக்கும். வர்த்தகப் பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். 

துலாம்

நிலுவையில் இருந்துவந்த பழைய கடன்கள் வசூலாகும். குழந்தைகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சாதகமான வாய்ப்புகள் அமையும். பழைய மகிழ்ச்சியான நினைவுகள் வெளிப்படும்.

விருச்சிகம்

வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். 

தனுசு

எதிர்பாராத சில பயணங்களால் மேன்மை ஏற்படும். அரசு தொடர்பான உதவிகளில் விவேகத்துடன் செயல்படவும். சக ஊழியர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

மகரம்

முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புது விதமான மாற்றங்கள் ஏற்படும். கடினமான சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். கணவன், மனைவி இடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் புரிதலும் தெளிவும் ஏற்படும். 

கும்பம்

நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். உடனிருப்பவர்கள் இடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பதட்டமில்லாத செயல்பாடுகள் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கும். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். ஆடம்பரமான பொருட்களின் மீது விருப்பம் உண்டாகும். 

மீனம்

எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்கள் நேரிடும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். 

பொறுப்பு துறப்பு:

இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றைத் தேர்வு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரை அணுகவும்.

Whats_app_banner