துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.28 உங்க ராசிக்கு எப்படி இருக்கும் பாருங்க..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.28 உங்க ராசிக்கு எப்படி இருக்கும் பாருங்க..!

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.28 உங்க ராசிக்கு எப்படி இருக்கும் பாருங்க..!

Karthikeyan S HT Tamil
Dec 28, 2024 06:06 AM IST

ஜோதிட கணக்கீடுகளின்படி, டிசம்பர் 28 ஆம் தேதியான இன்று (சனிக்கிழமை) துலாம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.28 உங்க ராசிக்கு எப்படி இருக்கும் பாருங்க..!
துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.28 உங்க ராசிக்கு எப்படி இருக்கும் பாருங்க..!

அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே உறவினர்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழல் காணப்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே மற்றவர்களை நம்பி வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். வர்த்தகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே மறைமுக எதிர்ப்புகள் மூலம் இழுபறிகள் தோன்றி மறையும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

மகரம்

மகரம் ராசி அன்பர்களே சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தன வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். இணைய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கவலை மறையும்.

கும்பம்

கும்பம் ராசி அன்பர்களே மனதில் திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.  அதிகாரிகளின் மறைமுகமான ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும். குழப்பங்கள் விலகும்.

மீனம்

மீனம் ராசி அன்பர்களே உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர்கள். உடன் இருப்பவர்கள் மூலம் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் உண்டாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner