துலாம்,விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்,மீன ராசியினரே.. இன்று நவ.27 எந்த ராசிக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? பாருங்க..!
துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு இன்று (நவம்பர் 27) வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.
வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரக விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, நவம்பர் 27 ஆம் தேதியான இன்று சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசியினருக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களே குண நலன்களில் சில மாற்றங்கள் காணப்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். ஆரோக்கிய செயல்களில் கவனத்துடன் இருக்கவும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். கவனம் வேண்டிய நாள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே ரகசியமான சில செயல்களால் ஆதாயம் அடைவீர்கள். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் பொறுப்புகள் குறையும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். வழக்குகளில் பொறுமையுடன் செயல்படவும். யாரையும் அலட்சியப்படுத்திச் செயல்படுவதைத் தவிர்க்கவும். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும்.
தனுசு
தனுசு ராசியினரே புதிய யுக்திகளால் மாற்றம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைச் செயல்படுத்துவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் நினைத்தது நிறைவேறும்.
மகரம்
மகர ராசி அன்பர்களே இன்று சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணியில் செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மறதி மறையும் நாள்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே நினைத்த பணிகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். எதிராக இருந்தவர்கள் விலகுவார்கள். ஆரோக்கிய விஷயத்தில் கவனத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். மனதளவில் தெளிவுகள் ஏற்படும். எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள். திருப்பணி செயல்களில் ஆர்வம் உண்டாகும்.
மீனம்
மீனம் ராசி அன்பர்களே திடீர் வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களைத் தவிர்க்கவும். கணவன் மனைவிக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வீர்கள். பணிச் சுமையினால் கோபம் அதிகரிக்கும். எதிர்பாராத அலைச்சல் அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.