துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.24 யாருக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்?
ஜோதிட கணக்கீடுகளின்படி, டிசம்பர் 24 ஆம் தேதியான இன்று (செவ்வாய்க்கிழமை) துலாம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, டிசம்பர் 24 ஆம் தேதியான இன்று (செவ்வாய்க்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களே வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உடன் இருப்பவர்களால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசி அன்பர்களே எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் நற்பெயர் கிடைக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலை உண்டாகும். எதிர்காலம் தொடர்பான தெளிவுகள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் இழுபறிகள் அகலும். தொழில் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். நிர்வாகத் துறைகளில் அதிகாரம் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.
மகரம்
மகரம் ராசி அன்பர்களே வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும்.
கும்பம்
கும்பம் ராசி அன்பர்களே உத்தியோக பயணங்களால் அலைச்சல் இருக்கும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். எண்ணிய சில பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும்.
மீனம்
மீனம் ராசி அன்பர்களே செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். கற்பனைத் துறைகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். உத்தியோகம் நிமித்தமான பணிகளில் மேன்மை ஏற்படும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.