துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று நவ.20 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று நவ.20 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று நவ.20 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Karthikeyan S HT Tamil
Nov 20, 2024 07:01 AM IST

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு இன்று (நவம்பர் 20) வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று நவ.20 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று நவ.20 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசியினருக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

துலாம்

எதிலும் பொறுமையுடன் செயல்படவும். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் நிமித்தமான பயணம் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பேச்சுக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.

விருச்சிகம்

வெளிப்படையான சில பேச்சுக்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். செயல்களில் இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். வர்த்தகப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். மனை மீதான கடன் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். ஜெயம் நிறைந்த நாள்.

தனுசு

பயனற்ற சிந்தனைகளைத் தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். விவசாயத் துறைகளில் பொறுமை வேண்டும். வெளியூர் பயணங்களில் மாற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். அமைதி வேண்டிய நாள்.

மகரம்

மனம் விரும்பிய படி செயல்படுவீர்கள். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். கலகலப்பான சூழலால் மகிழ்ச்சி உண்டாகும். எதிலும் சிக்கனமாகச் செயல்படுவது சார்ந்த முடிவுகள் உண்டாகும். சுற்றுலா செல்வது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கல்வியில் மேன்மை ஏற்படும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள் குறையும். பெருமை நிறைந்த நாள்.

கும்பம்

சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். சிக்கல் விலகும் நாள்.

மீனம்

மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தொழில் ரீதியான தொடர்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் சாதகமான சூழல் அமையும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உதவி நிறைந்த நாள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்