துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.15 யாருக்கு சூப்பரான நாள்?.. இன்றைய ராசிபலன்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.15 யாருக்கு சூப்பரான நாள்?.. இன்றைய ராசிபலன்!

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.15 யாருக்கு சூப்பரான நாள்?.. இன்றைய ராசிபலன்!

Karthikeyan S HT Tamil
Dec 15, 2024 05:15 AM IST

ஜோதிட கணக்கீட்டின்படி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசியினருக்கு விடுமுறை தினமான இன்றைய நாள் (டிசம்பர் 15) எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.15 யாருக்கு சூப்பரான நாள்?.. இன்றைய ராசிபலன்!
துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.15 யாருக்கு சூப்பரான நாள்?.. இன்றைய ராசிபலன்!

ஜோதிட கணக்கீட்டின் படி, டிசம்பர் 15 ஆம் தேதியான இன்று சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த வகையில், துலாம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே இன்றைய தினம் கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். பயணத்திற்கு தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வது நல்லது. விவசாயப் பணிகளில் விவேகம் வேண்டும். வித்தியாசமான கற்பனைகள் மூலம் குழப்பம் ஏற்படும். எந்த விஷயத்திலும் முன்கோபம் இன்றி செயல்படவும். 

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே தாய் மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். உத்தியோக பணிகளில் பதற்றம் இன்றி செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான சூழல் உண்டாகும். திடீர் தனவரவுகள் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களைத் தவிர்க்கவும். பூர்வீக சொத்துக்கள் மூலம் சிறு விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். உலக வாழ்க்கை பற்றிய புரிதலும் புதிய கண்ணோட்டமும் பிறக்கும்.  

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சூழ்நிலைக்கேற்ப பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். புதிய வீடு வாங்குவது சார்ந்த முயற்சிகள் கைகூடும். 

மீனம்

மீனம் ராசி அன்பர்களே இளைய சகோதரர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கமிஷன் பணிகளில் லாபங்கள் உருவாகும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner