துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.11 யார் யாருக்கு எப்படி இருக்கும் பாருங்க..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.11 யார் யாருக்கு எப்படி இருக்கும் பாருங்க..!

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.11 யார் யாருக்கு எப்படி இருக்கும் பாருங்க..!

Karthikeyan S HT Tamil
Dec 11, 2024 05:10 AM IST

ஜோதிட கணக்கீட்டின்படி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசியினருக்கு டிசம்பர் 11 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.11 யார் யாருக்கு எப்படி இருக்கும் பாருங்க..!
துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.11 யார் யாருக்கு எப்படி இருக்கும் பாருங்க..!

அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு இன்று (டிசம்பர் 11) வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே இன்று கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும் வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். திறமைக்கேற்ப உயர்வு உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். தவறிப் போன சில வாய்ப்புகள் மீண்டும் ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே பணி நிமித்தமான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் விலகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் உண்டாகும். பயணங்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வர்த்தகப் பணிகளில் சிந்தித்து செயல்படவும். பொறுமை வேண்டும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே வியாபாரப் பணிகளில் சிறு தாமதங்கள் தோன்றி மறையும். தனிப்பட்ட ஆசைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறை சக்திகளை பற்றிய புரிதல் உண்டாகும். அரசு செயல்களில் அலைச்சல்கள் மேம்படும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே மனை சார்ந்த பணிகளில் லாபம் ஏற்படும். பயணங்களில் அனுபவமும், அனுகூலமும் உருவாகும். இழுப்பறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். செய்கின்ற முயற்சிக்கு உண்டான பலன்கள் ஏற்படும். விதண்டாவாத சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பும் ஆதாயமும் ஏற்படும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே சுபகாரிய முயற்சிகள் கைகூடும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். தந்தை வழி ஒத்துழைப்புகள் கிடைக்கும். அக்கம், பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். எழுத்து தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும்.

மீனம்

மீனம் ராசி அன்பர்களே வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பொன், பொருட்சேர்க்கை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்க்கவும். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகள் நல்ல ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குழந்தைகளின் செயல்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner