துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜன.01 எந்தெந்த ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜன.01 எந்தெந்த ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..!

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜன.01 எந்தெந்த ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..!

Karthikeyan S HT Tamil
Jan 01, 2025 07:08 AM IST

ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 01 ஆம் தேதியான இன்று (புதன்கிழமை) துலாம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜன.01 எந்தெந்த ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..!
துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜன.01 எந்தெந்த ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..!

அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். ஆடம்பரமான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். உங்கள் மீதான சிறு சிறு வதந்திகள் மறையும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் மாற்றமான அணுகுமுறையால் லாபம் மேம்படும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடிவரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே பேச்சுக்களில் தெளிவுகள் பிறக்கும். அலுவல் பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். வரவுகளில் இருந்துவந்த தாமதம் மறையும். வியாபாரத்தில் புதிய வேலையாட்கள் கிடைப்பார்கள். சிறு தூரப் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே பேச்சுவார்த்தைகள் மூலம் சாதகமான சூழல் அமையும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் காணப்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். பொருளாதாரச் சிக்கல்கள் குறையும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை பிறக்கும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

மகரம்

மகரம் ராசி அன்பர்களே கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவுகள் ஏற்படும். பலவிதமான சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். வெளி உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகும்.

கும்பம்

கும்பம் ராசி அன்பர்களே ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் மிதமான லாபம் ஏற்படும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். 

மீனம்

மீனம் ராசி அன்பர்களே குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதளவில் பக்குவம் பிறக்கும். நெருக்கமானவர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உத்தியோக பணிகளில் சில சலுகைகள் கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner