மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று நவ.20 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!
மேஷம் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு நவம்பர் 20 ஆம் தேதியான இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.
வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரக விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, நவம்பர் 20 ஆம் தேதியான இன்று சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசி உள்ளிட்ட 6 ராசியினருக்கு வாரத்தின் முதல் நாளான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசி அன்பர்களே வியாபார ரீதியான பயணங்கள் ஏற்படும். ஆசிரியர்களின் ஆலோசனை மாற்றத்தை உருவாக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். ஆரோக்கியம் குறித்த சிந்தனைகள் மேம்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டாகும். தன வரவுகளில் திருப்தி உண்டாகும்.
ரிஷபம்
ரிஷபம் ராசி அன்பர்களே இன்று மனதில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் மேம்படும். விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் மேம்படும். பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பத்திரம் சார்ந்த விஷயங்களில் மேன்மை ஏற்படும்.
மிதுனம்
மிதுனம் ராசி அன்பர்களே இன்று எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். முயற்சிக்கு உண்டான பலன்கள் தாமதமாக கிடைக்கும். வியாபார ரீதியான கொள்முதலில் சிந்தித்துச் செயல்படவும். கனிவான பேச்சுக்களால் நன்மதிப்பு உருவாகும். அலுவலகப் பணிகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். காலம் தவறி உணவு உண்பதைத் தவிர்க்கவும்.
கடகம்
கடக ராசியினரே திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். சமூகப் பணிகளில் சில புரிதல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தர்மப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். விதண்டாவாத பேச்சுக்களைத் தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் விவேகத்துடன் செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களைத் தவிர்க்கவும்.
சிம்மம்
குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதரர்கள் வழியில் சிறு சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக வீட்டினை சீரமைத்து விரிவுபடுத்துவீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த சில வழக்குகளில் தெளிவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியினரே நினைத்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய பொறுப்புகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். ஆராய்ச்சிப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். புதுவிதமான தேடல்கள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்