மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.09 யார் யாருக்கு எப்படி இருக்கும் பாருங்க..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.09 யார் யாருக்கு எப்படி இருக்கும் பாருங்க..!

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.09 யார் யாருக்கு எப்படி இருக்கும் பாருங்க..!

Karthikeyan S HT Tamil
Published Dec 09, 2024 05:05 AM IST

ஜோதிட கணிப்புகளின் படி, மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு வாரத்தின் முதல் நாளான இன்றைய தினம் (டிச.09) எப்படி இருக்கும் என்பது பற்றி பார்ப்போம்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.09 யார் யாருக்கு எப்படி இருக்கும் பாருங்க..!
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.09 யார் யாருக்கு எப்படி இருக்கும் பாருங்க..!

இது போன்ற போட்டோக்கள்

அந்தவகையில், மேஷம் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசியினருக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், கல்வி, வேலை வாய்ப்பு, ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம்.

மேஷம்

மேஷம் ராசி அன்பர்களே வாரத்தின் முதல் நாளான இன்று சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். சகோதர சகோதரிகள் வகையில் சுபவிரயங்கள் ஏற்படும். எதிர்பாராத செய்திகள் மூலம் சேமிப்புகள் குறையும்.  புதிய வேலை சார்ந்த முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை குறைப்பீர்கள். சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த குழப்பங்கள் குறையும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும்.  

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் மூலம் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் ஏற்படும். கடன் சார்ந்த சிந்தனைகளால் நெருக்கடிகள் ஏற்படும். வாகன பயணங்களில் பொறுமையுடன் இருக்கவும். 

கன்னி

கன்னி ராசி அன்பர்களே நண்பர்கள் வழியில் ஒற்றுமை ஏற்படும். போட்டி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தவறிப் போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உடன் இருப்பவர்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.