மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜன.04 யாருக்கு சூப்பரான நாளாக இருக்கும் பாருங்க!
ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 04 ஆம் தேதியான இன்று (சனிக்கிழமை) மேஷம் முதல் கன்னி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, ஜனவரி 04 ஆம் தேதியான இன்று (சனிக்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அந்தவகையில், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷம் ராசி அன்பர்களே கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். செல்லப்பிராணிகளிடம் கவனத்துடன் இருக்கவும். உயர்கல்வி தொடர்பான குழப்பங்கள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் உண்டாகும். சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் உண்டாகும். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷபம் ராசி அன்பர்களே உத்தியோக பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். நெருக்கமானவர்கள் இடத்தில் நல்லுறவு உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்களில் நிதானம் வேண்டும். நிதி தொடர்பான நெருக்கடிகள் குறையும். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும். புதிய முயற்சிகளில் வித்தியாசமான அனுபவங்கள் ஏற்படும்.
மிதுனம்
மிதுனம் ராசி அன்பர்களே நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் மூலம் மேன்மை ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். சாதுரியமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக்கொள்வீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். உங்கள் மீதான நம்பிக்கைகள் வெளிவட்டாரத்தில் அதிகரிக்கும்.
கடகம்
கடகம் ராசி அன்பர்களே கணவன், மனைவிக்கிடையே ஆரோக்கியமற்ற விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கிய செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வீடு, வாகனம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். வியாபார செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். மறதி பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவுபெறும்.
சிம்மம்
சிம்மம் ராசி அன்பர்களே மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களால் ஆதாயம் ஏற்படும். பேச்சுத் திறமையால் வரவுகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கு இடையே புரிதலும் நெருக்கமும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே நினைத்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். அமைதியான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எதிர்பாராத சில செலவுகள் நேரிடும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் ஏற்படும். வியாபார நிமித்தமான கடன் உதவிகள் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.