மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜன.01 உங்களுக்கு எப்படி இருக்கும்? - புத்தாண்டு பலன்கள்!
ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 1 ஆம் தேதியான இன்று (புதன்கிழமை) மேஷம் முதல் கன்னி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, ஜனவரி 01 ஆம் தேதியான இன்று (புதன்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அந்தவகையில், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷம் ராசி அன்பர்களே வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். பொழுதுபோக்கு செயல்களால் தாமதம் உண்டாகும். பணி நிமித்தமான நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். இலக்கிய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே உயர் அதிகாரிகள் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். பணியாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும்.
மிதுனம்
மிதுனம் ராசி அன்பர்களே அரசு சார்ந்த செயல்பாடுகளில் தாமதமான சூழல் ஏற்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். எந்த ஒரு செயலிலும் உணர்ச்சி வேகம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக்கூடாது என்று முடிவெடுப்பீர்கள். வியாபார பணிகளில் நிதானம் வேண்டும்.
கடகம்
கடகம் ராசி அன்பர்களே புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு தொடர்பான பணிகளுக்கு தீர்வு ஏற்படும். தந்தையிடம் வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். துணைவர் வழியில் ஆதாயம் அடைவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
சிம்மம்
சிம்மம் ராசி அன்பர்களே உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். திடீர் யோகம் மூலம் மாற்றம் பிறக்கும்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே ஆடம்பர பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வியாபார பணிகளில் மந்தமான சூழல் காணப்படும். குழந்தைகளின் உயர் கல்வி குறித்த தெளிவுகள் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.