Today Pooja Time : இன்று வியாழக்கிழமை.. மகா சங்கட ஹர சதுர்த்தி.. வாஸ்து செய்ய உகந்த நேரம் எது.. பார்க்கலாம் வாங்க!
Today Pooja Time : மகா சங்கட ஹர சதுர்த்தி தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தி என்று போற்றப்படுகிறது. நலன்களை அள்ளித் தருபவராக விளங்கக் கூடியவர் விநாயகர். இதனால் மஹா சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை மனம் உருகி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை
Today Pooja Time : இன்று ஆகஸ்ட் 22ம் தேதி வியாழக்கிழமை இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
மாதம் : ஆவணி
தேதி: 6
கிழமை : வியாழக்கிழமை
திதி : திரிதியை நேரம் மாலை 6 மணி 14 நிமிடம் வரை
நாள் : மேல் நோக்கு நாள்
பிறை : தேய்பிறை மாலை
நட்சத்திரம் : உத்திரட்டாதி காலை 3 மணி 13 நிமிடம் வரை
சூரிய உதயம்
காலை : 6 மணி 5 நிமிடம்
நல்ல நேரம்
காலை 10மணி 45 நிமிடம் முதல் 11மணி 45 நிமிடம் வரை
நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டிய நேரம்
ராகுகாலம் : பகல் 1.30 முதல் 3 மணி வரை
எமகண்டம் காலை 6 முதல் 7.30 மணி வரை
குளிகை : காலை 9 முதல் 10.30 மணி வரை
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
சுப முகூர்த்த நாள்
இன்று சுப முகூர்த்த நாள். இன்று திருமணம் செய்வது முதல் நல்ல விஷயங்களை செய்வதற்கான மிகவும் நல்ல நாள்.
மகா சங்கட ஹர சதுர்த்தி
தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தி என்று போற்றப்படுகிறது. தெய்வங்களில் முழுமுதற் கடவுளாக விளங்க கூடியவர் விநாயகப் பெருமான். இந்து சமயத்தை கடைபிடித்து வரும் பெரும்பாலானோர் வழிபாடு செய்யும் இஷ்ட கடவுள் விநாயகர். அனைத்து வித நலன்களையும் அள்ளித் தருபவராக விளங்கக் கூடியவர் விநாயகர். இதனால் மஹா சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை மனம் உருகி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை
இன்று வாஸ்து நாள்
வாஸ்து செய்ய நல்ல நேரம்
காலை 7 மணி 23 நிமிடம் முதல் 7 மணி 59 வரை
வாஸ்து பகவான் வாஸ்து புருஷர் என்று அழைக்கப்படுகிறார். வாஸ்து சாஸ்திரபடி பூமிக்கு அடியில் தூங்கி கொண்டிக்கும் இவர் வருடத்தில் 8 நாட்கள் மட்டுமே கண் விழிப்பார். இந்த 8 நாட்களிலும் ஒன்றரை மணி நேரம் மட்டும் தான் விழிப்பார் . அப்படி வாஸ்து பகவான் கண் விழிக்கும் நாள் தான் இன்று . இதனால் இன்று வீடு கட்ட வாஸ்து பூஜை செய்ய மிகவும் உகந்த நாள். பூமி தொடர்பான எந்த விஷயங்களை தொடங்கினாலும் அதில் இருக்கும் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.
இதேபோல் பொதுவாகவே ஆவணி மாதத்தில் வீடு கட்டலாம். இதனால் சொந்த பந்தங்களின் நட்புறவு அதிகரிக்கும். சோதனைகளை கடந்து செல்வீர்கள். மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்