Today Pooja Time : செவ்வாய் வழிபாட்டின் விஷேசம்.. இன்று பூஜைக்கு உகந்த நேரம் மற்றும் வழிபாட்டின் பயன்கள் இதோ!
Today Pooja Time : செவ்வாய் கிழமை அன்று பிற்பகல் மூன்று மணி முதல் நாலரை மணி வரை உள்ள ராகு காலத்தில் துர்க்கை அம்மன் கோயில் சென்று வழிபாடு செய்வோருக்கு வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் நீங்கும். எதிரிகள் தொல்லைகள், தொழில் செய்வதில் உள்ள போட்டி பொறாமை அனைத்தும் நீங்கும்.
Today Pooja Time : இன்று 2024 ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி செவ்வாய் கிழமை. பொதுவாக செவ்வாய் கிழமை அன்று முருகன் வழிபாடு தொடர்ந்து செய்து வந்தால் செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். மேலும் தொடர்ந்து செவ்வாயன்று அம்மன் கோயில் சென்று வழிபட்டு வருவோருக்கு வாழ்வில் மங்களகரமான காரியங்கள் கைகூடும். விரதங்கள் பலவிதமாக இருந்தாலும் மௌன விரதம் தான் இருப்பதிலேயே மிகவும் முக்கியமானது. செவ்வாய் கிழமை அன்று மௌன விரதம் மேற்கொள்வது சிறப்பானது. பூமிகாரகன் என்றும் கூறப்படுகிற இந்த செவ்வாய் அன்று விரதம் இருப்போருக்கு பூமி சம்பந்தப்பட்ட நிலம் வாங்குவது வீடு கட்டுவது போன்ற வேலைகளை தடையின்றி செய்ய முடியும். ஜாதக ரீதியாக உள்ள செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணம் செய்வதில் உள்ள தடைகள் நீங்கும். செவ்வாய் கிழமை அன்று பிற்பகல் மூன்று மணி முதல் நாலரை மணி வரை உள்ள ராகு காலத்தில் துர்க்கை அம்மன் கோயில் சென்று வழிபாடு செய்வோருக்கு வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் நீங்கும். எதிரிகள் தொல்லைகள், தொழில் செய்வதில் உள்ள போட்டி பொறாமை அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. இத்தகைய நல்ல நாள் செவ்வாய் கிழமை.
இன்றைய பஞ்சாங்கம்.
தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
மாதம் : ஆவணி
தேதி: 11
கிழமை : செவ்வாய்க்கிழமை.
திதி : அஷ்டமி காலை 7 மணி 30 நிமிடம் வரை பின்பு நவமி ஆரம்பம்.
நாள் : மேல் நோக்கு நாள்
பிறை : தேய்பிறை
நட்சத்திரம் : இன்று ரோகிணி ஆகஸ்ட். 27ம் தேதி காலை 8 மணி 54 நிமிடம் வரை பின்பு மிருகசீருஷம்
சூரிய உதயம்
காலை : 6 மணி 04 நிமிடம்
நல்ல நேரம்
காலை : 7 மணி 45 நிமிடம் முதல் 8 மணி 45 நிமிடம் வரை
மாலை : 4 மணி 45 நிமிடம் முதல் 5 மணி 45 நிமிடம் வரை
நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டிய நேரம்..
ராகுகாலம் : பகல் 3 மணி முதல் 4 மணி 30 நிமிடம் வரை
எமகண்டம் காலை 9 மணி முதல் 10 மணி 30 நிமிடம் வரை
குளிகை : காலை 12 மணி முதல் 1 மணி 30 நிமிடம் வரை
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
கரணம் : 7.30 - 9
மேலும் பொதுவாக செவ்வாய் கிழமை மங்களகரமான நாள் என்பதால் தான் சில காரியங்களை செய்யக்கூடாது என்று சொல்வதுண்டு. குறிப்பாக செவ்வாய் கிழமைகளில் யாரிடமும் பணம் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். முடி நகம் வெட்டுவது கூடாது. அதேபோல் மேற்கு வடக்கு திசை நோக்கி நீண்ட பயணம் செய்வதையும் தவிர்ப்பது நல்லது என்பது நம்பிக்கை. அதேபோல் யாகங்கள் செய்வதற்கு உகந்ததாக இல்லை. செவ்வாய் கிழமை விரதம் இருப்பவர்கள் உணவில் உப்பு தவிர்க்க வேண்டும் என்று ஐதீகம் உண்டு.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்ந்து ஜோதிடம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்
தொடர்புடையை செய்திகள்