Today Pooja Time : வெள்ளிக்கிழமை பூஜை செய்ய ரெடியா.. நல்ல நேரம் இதுதான்.. இன்று செய்ய வேண்டியதும்.. கூடாததும் இதோ!
Today Pooja Time : வெள்ளிக்கிழமைகளில் சில காரியங்களை செய்வது மிகவும் நல்லது. அது உங்கள் வீட்டில் ஐஸ்வர்யம் அதிகரிக்க உதவும். கல் உப்பு, அரிசி, தானியங்கள் போன்றவற்றை வாங்கி வீட்டில் வைப்பது மிகவும் விஷேசம். இதனால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும்.
Today Pooja Time : இன்று 2024 ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி வெள்ளிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
மாதம் : ஆவணி
தேதி: 7
கிழமை : வெள்ளிக்கிழமை
திதி : சதுர்த்தி நேரம் மாலை 6 மணி 48 நிமிடம் வரை பின்பு பஞ்சமி
நாள் : சம நோக்கு நாள்
பிறை : தேய்பிறை
நட்சத்திரம் : இன்று ரேவதி ஆகஸ்ட். 24ம் தேதி அதி காலை 1 மணி 35 நிமிடம் வரை பின்பு அசுபதி
சூரிய உதயம்
காலை : 6 மணி 5 நிமிடம்
நல்ல நேரம்
காலை : 9 மணி 15 நிமிடம் முதல் 10 மணி 15 நிமிடம் வரை
மாலை : 4 மணி 45 நிமிடம் முதல் 5 மணி 45 நிமிடம் வரை
நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டிய நேரம்
ராகுகாலம் : பகல் 10 மணி 30 நிமிடம் முதல் நண்பகல் 12 மணி வரை
எமகண்டம் பிற்பகல் 3 மணி முதல் முதல் 4 மணி 30 நிமிடம் வரை
குளிகை : காலை 7 மணி 30 நிமிடம் முதல் 9 மணி வரை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
கரணம் : 1.30 - 3
அம்மன் வழிபாடு
வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாள். இந்த நாளில் வீடு மற்றும் கோயில்களில் விளக்கேற்றி வழிபடுவதால் கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
சுப முகூர்த்த நாள்
இன்று சுப முகூர்த்த நாள். இந்து சமயத்தில் சுப காரியங்களை தொடங்க நேரம் காலம் பார்ப்பது வழக்கம். நம் வாழ்வில் புதிதாக தொடங்கும் காரியங்களை நல்ல நேரத்தில் தொடங்குவதால் அந்த காரியம் சுபமாகவும், மங்கலகரமாகவும் முடியும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இன்று ஆகஸ்ட் 23 சுப முகூர்த்த நாள். வெள்ளிக்கிழமை. இன்று திருமணம் முதல் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்க மிகவும் உகந்த நாள்.
வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டியவை
வெள்ளிக்கிழமைகளில் சில காரியங்களை செய்வது மிகவும் நல்லது. அது உங்கள் வீட்டில் ஐஸ்வர்யம் அதிகரிக்க உதவும். கல் உப்பு, அரிசி, தானியங்கள் போன்றவற்றை வாங்கி வீட்டில் வைப்பது மிகவும் விஷேசம். இதனால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். இப்படி செய்வதால் ஏற்கனவே நீங்கள் வாங்கிய கடன் குறையும். வீட்டில் மென்மேலும் செல்வம் பெரும் என்பது நம்பிக்கை. வீட்டில் காலை மாலை இரண்டு நேரமும் தீபம் ஏற்றி வழிபடுவதும் மிகவும் நல்லது.
வெள்ளிக்கிழமையில் செய்ய கூடாதவை
வெள்ளிக்கிழமை ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் முகச்சவரம் செய்வது நகம் வெட்டுவது போன்ற காரியங்களை தவிர்க்க வேண்டும். பூஜை பொருட்களை சுத்தம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்ந்து ஜோதிடம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்
டாபிக்ஸ்