தமிழ் செய்திகள்  /  Astrology  /  To Get A Government Job Support Of These 2 Planets Is Required And Must Be Done To Get Blessings

Government Job: அரசு வேலை கிடைக்க இந்த 2 கிரகங்களின் சப்போர்ட் தேவை; அருள்கிடைக்க செய்யவேண்டியவை!

Marimuthu M HT Tamil
Mar 19, 2024 10:47 PM IST

Government Job: அரசு வேலை கிடைக்க இரண்டு கிரகங்களின் ஆதரவு முக்கியம் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவற்றின் அருள்கிடைக்க செய்யவேண்டியவை குறித்துக் காண்போம்.

அரசு வேலை கிடைக்க இந்த 2 கிரகங்களின் சப்போர்ட் தேவை; அருள்கிடைக்க செய்யவேண்டியவை!
அரசு வேலை கிடைக்க இந்த 2 கிரகங்களின் சப்போர்ட் தேவை; அருள்கிடைக்க செய்யவேண்டியவை!

ட்ரெண்டிங் செய்திகள்

எல்லோருக்கும் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஜோதிடத்தின்படி, தொழிலில் வெற்றி பெறவும், வேலை பெறவும் சூரிய பகவான் மற்றும் சனி பகவானின் பங்கு மிகவும் முக்கியமானது, அபரிவிதமானது. 

சூரியபகவான் மற்றும் சனி பகவானின் பிரார்த்தனைகளை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் ஒரு நல்ல வேலையைப் பெறலாம். ஜோதிடத்தின்படி, சூரிய பகவான் மற்றும் சனி பகவான் ஆகிய இரண்டும் கிரகங்கள் அரசு வேலைப் பெறுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. 

அரசு வேலை கிடைக்க சூரிய பகவான் தான் காரணம் என சோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.  ஜாதகத்தின் பத்தாம் வீட்டின் அதிபதியான சனி பகவான், அந்த நபரின் வேலை மற்றும் வணிகம் பற்றிய அமைப்பினை தெரியப்படுத்துகிறார். 

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், உங்கள் ஜாதகத்தின் பத்தாம் வீடு பலவீனமாகவோ அல்லது எதிரி கிரகத்தால் பாதிக்கப்பட்டதாகவோ கருதப்பட வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், வேத ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிகாரங்களைச் செய்யுங்கள். 

சூரிய பகவானை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்:

பொது மற்றும் தனியார் துறைகளின் வேலைகள் மற்றும் தலைமைப் பொறுப்புகிடைக்க, சோதிட சாஸ்திரத்தில் சூரிய கிரகம் பொறுப்பாகும். அதாவது, சூரிய பகவானின் பார்வையால், நீங்கள் முன்னேறும்போது, நீங்கள் ஒரு உயர் பதவியைப் பெறுவீர்கள். தகுதி இல்லாமல் இந்த தலைமை சாத்தியமில்லை. சூரிய கிரகத்தை வழிபட்டால் தொழிலில் வெற்றி பெறலாம். எனவே, தினமும் சூரிய உதயத்தின்போது சூரிய பகவானை வணங்கி நீர் விடுங்கள். 

சனி கிரகத்தைப் பலப்படுத்த, சனி கிரகம் தொடர்பான பரிகாரங்களை நீங்கள் செய்ய வேண்டும். சனிக்கிழமை அன்று கருப்பு எள் தானம் செய்யலாம். சனிக்கிழமையன்று, கோயிலில் கடுகு எண்ணெயைப் படைக்கலாம். சனிக்கிழமை காலையிலும் மாலையிலும் அரச மரத்தின்கீழ், விளக்குகளை ஏற்றி சனி பகவானை வழிபடலாம்.

எதிரிகள் தொல்லை நீங்க செய்யவேண்டியவை:

உங்கள் ஜாதகத்தின் பத்தாம் வீட்டில் வீற்றிருக்கும் சனி பகவானை முதலில் பலப்படுத்துங்கள்.  அப்படி செய்கையில், வீட்டில் எதிரி கிரகம் ஏதேனும் தென்பட்டால், அதனையும் அறிந்துகொள்ள முயற்சியுங்கள்.

இதற்காக நீங்கள் ஒரு கற்றறிந்த ஜோதிடரை அணுகலாம். நீங்களே தகவல்களை சேகரித்து சனி கிரகத்தைப்  பலப்படுத்தினால், எதிரி கிரகத்தின் தாக்கம் இருக்காது. கர்மாவுக்குப் பலன் தரும் கிரகம் சனி. நம்முடைய ஒவ்வொரு நன்மை, தீமைகளுக்கும் ஏற்ப பலன் தரக்கூடியவர், சனி பகவான். இது கர்மாவின் வீட்டின் பத்தாவது வீட்டில் இருப்பார். 

வேலையில் இருக்கும் பிரச்னைகள் நீங்க செய்யவேண்டியவை:

ஒருவரின் ஜாதகத்தில் சனி பலவீனமாக இருந்தால், அவர் தனது வேலையில் நிச்சயம் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், சனி கிரகத்தை அமைதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். அதற்காக சனிக்கிழமை விரதம் இருந்து சனிக்கிழமை கருப்பு எள் மற்றும் கடுகு எண்ணெயை தானம் செய்யலாம். 

கருப்பு எள்ளை ஒரு துணியில் கட்டி, அதனை விளக்கில் இட்டு, சனி பகவான் முன் விளக்கு ஏற்றி வழிபட, வேலையில் இருக்கும் தடைகள் நிவர்த்தியாகும். நாம் வேண்டும் அரசுவேலை கிடைக்கும். 

நவக்கிரக சாந்தி ஹோமம் செய்வதன் மூலம், அனைத்து கிரகங்களும் மங்களகரமாக மாறும். பின்னர் மக்கள் அதன் சுப பலன்களைப் பெறுகிறார்கள். இதற்காக நவக்கிரக யந்திரத்தை பிரதிஷ்டை செய்து நவக்கிரக சாந்தியினை அடையலாம்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்