தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tirupati: ஏழுமலையான் தரிசனம்-மூத்த குடிமக்களுக்கு ஆன்லைனில் டிக்கெட்..!

Tirupati: ஏழுமலையான் தரிசனம்-மூத்த குடிமக்களுக்கு ஆன்லைனில் டிக்கெட்..!

Manigandan K T HT Tamil
Feb 14, 2023 08:43 AM IST

Tirumala darshan online booking: திருப்பதி வெங்கடாஜலபதியை மூத்த குடிமக்களும், மாற்றத்திறனாளிகளும் தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

திருப்பதி ஏழுமலையான கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1,500 கோடி வசூலாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது
திருப்பதி ஏழுமலையான கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1,500 கோடி வசூலாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது

இம்மாதம் 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் ஏழுமலையானை தரிசிக்க தேவையான டிக்கெட்டுகள் இன்று காலை ஒன்பது மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

டிக்கட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் www.tirupatibalaji.gov.in இணையதளம் மூலம் அவற்றை முன் பதிவு செய்து கொள்ளலாம்.

உலகத்தில் இருக்கும் பணக்கார கோயில்களில் திருப்பதி ஏழுமலையான் கோயிலும் ஒன்று. கோயிலில் எப்போதும் பக்தர்களின் கூட்டம் குறையாமல் இருக்கும். கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுக்குப் பிறகு பக்தர்களின் கூட்டம் இந்த கோயிலில் அலை மோதி வருகிறது.

கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கையும் உச்சத்திலிருந்து வருகிறது. இந்த மாதம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை கல்யாண உற்சவம், கட்டண உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, ஊஞ்சல் சேவை நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ளத் தேவையான டிக்கெட்டுகள் 9ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்