தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tirupati Darshan Cancel: வரிசை கட்டி நிற்கும் பக்தர்கள்.. அதிரடி முடிவு எடுத்த திருப்பதி தேவஸ்தானம்!

Tirupati Darshan Cancel: வரிசை கட்டி நிற்கும் பக்தர்கள்.. அதிரடி முடிவு எடுத்த திருப்பதி தேவஸ்தானம்!

Aarthi Balaji HT Tamil
May 24, 2024 07:23 AM IST

Tirupati Darshan Cancel: திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் இலவச தரிசனத்திற்கான சேவை இன்று ( மே 24 ) காலை வரை நிறுத்தப்பட்டுள்ளது என தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

வரிசை கட்டி நிற்கும் பக்தர்கள்.. அதிரடி முடிவு எடுத்த தேவஸ்தானம்!
வரிசை கட்டி நிற்கும் பக்தர்கள்.. அதிரடி முடிவு எடுத்த தேவஸ்தானம்!

ஸ்ரீவாரி சிறப்பு நுழைவுச் சீட்டு

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருமலை ஸ்ரீவாரி சிறப்பு நுழைவுச் சீட்டு ரூ. 300 டிடிடி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. மேலும், அதே நாளில் (மே 24) மாலை 3 மணிக்கு திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள தங்கும் அறைகளின் ஒதுக்கீடு ஆன்லைனில் வெளியிடப்படும். ஸ்ரீவாரி ஆர்ஜிதசேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளுக்கு https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். தினமும் 20 ஆயிரம் இலவச டிக்கெட் சாமி தரிசனத்திற்காக வழங்கப்பட்டு வருகிறது.

சுவாமி தரிசனம் செய்ய அதிக நேரம் ஆவதால், வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு அனைத்து விதமான வசதிகளையும் திருமலை திருப்பதி கோயில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு குடிநீர், அன்னதானம், பால் வழங்கப்பட்டு வருகிறது.

திருமலையில் பக்தர்கள் கூட்டம்

பக்தர்களுக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேரோட்டம் முடிந்து, கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள் என்பதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெட்டிகளும், நாராயணகிரி கொட்டகைகளும் நிரம்பியதால், சிலாதோரணம் வட்டம் வரை வரிசை நீண்டது.

இந்நிலையில் திருப்பதி கோயிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சுமார் 3 மணி நேரம் தொடங்கி 24 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டி இருக்கிறது.

இதனிடையே பக்தர்களின் வருகையால் திருமலையில் இருக்கும் வைகுண்டம் காத்திருப்பு காம்பளக்சில் அமைக்கப்பட்டுள்ள 32 அறைகள் முழுவதும் நிரம்பி வழிகிறது.

30 மணி நேரத்திற்கு மேல் காத்திருப்பு

அங்கு இடமில்லாத காரணத்தினால் பக்தர்கள் சுமார் 4 முதல் 5 கிலோ மீட்டர் வரை தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் எழுந்து இருக்கிறது. இதன் காரணமாக இலவச நேரடி தரிசனத்திற்கு 24 முதல் 30 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்து உள்ளது. திருப்பதியில் இன்று ( மே 24 ) காலை வரை இலவச தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பல ஊர்களில் இருந்து சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் இந்த அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்